மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு !

தமிழகம் பொது தகவல்கள்

mettur anai - 2026கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும்  மழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,200 கன அடியாக இருந்தது. இன்று காலை முதல் வினாடிக்கு 200 கன அடி உயர்ந்து 8,400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 45.33 அடியாகவும், நீர் இருப்பு 14.99 டி.எம்.சியாகவும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.