ipl 2024 - 2026

IPL 2024: அந்த சம்பவத்துக்கு பின்… சுதாரித்துக் கொண்ட கே.எல்.ராகுல்!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
ipl 2024 - 2026

58ம் நாள்: ஐபிஎல் 2024 – 17.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும் என்பதையும்  மும்பையில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நேற்று தெரிவித்திருந்தோம்.

எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவதாக மும்பை அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆட்டம் முழுமையாக நடைபெற்றது. 

லக்னோ அணி (214/6, நிக்கோலஸ் பூரன் 75, கே.எல். ராகுல் 55, மார்கஸ் ஸ்டோயினிஸ் 28, ஆயுஷ் பதோனி 22, க்ருணால் பாண்ட்யா 12, நுவன் துஷாரா 3/28, பியுஷ் சாவ்லா 3/29) மும்பை அணியை (196/6, ரோஹித் ஷர்மா 68, நமன் தீர் 62*,  டிவால்ட் ப்ரிவிஸ் 23, ஹார்திக் பாண்ட்யா 16, இஷான் கிஷன் 14, ரவி பிஷ்னோய் 2/37, நவீன் உல் ஹக் 2/50) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. இதனால் லக்னோ அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று லக்னோ அணிக்கு கே.எல். ராகுலும் தேவதத் படிக்கலும் தொடக்கவீரர்களாக இறங்கினர்.

படிக்கல் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுல் (41 பந்துகளில் 55 ரன் 3 ஃபோர், 3 சிக்சர்) 17.1ஆவது ஓவர் விளையாடினார்.

மூன்றவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (22 பந்துகளில் 28 ரன்), தீபக் ஹூடா (9 பந்துகளில் 11 ரன்), அர்ஷத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோருக்கு இன்று நல்ல நாளாக அமையவில்லை.

ஆனால் நிக்கோலஸ் பூரன் இன்று அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 29 பந்துகளில் 5 ஃபோர், 8 சிக்சர்களுடன் 75 ரன் எடுத்தார். 75 ரன்களில் 68 ரன் கள் ஃபோர்களிலும் சிக்சர்களிலும் வந்தன.

ஆயுஷ் பதோனி (10 பந்துகளில் 2 ரன்), க்ருணால் பாண்ட்யா (12 ரன்) இருவரும் கடைசி ஓவர்களில் அதிக ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கட் இழப்பிற்கு 214 ரன் எடுத்தது. மும்பை அணியி நுவன் துஷாராவும் பியுஷ் சாவ்லாவும் தலா 3 விக்கட் எடுத்தனர். 

215 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மா (38 பந்துகளில் 68 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவருடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய டிவால்ட் ப்ரிவிஸ் (20 பந்துகளில் 23 ரன்), இஷான் கிஷன் (15 பந்துகளில் 15 ரன்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 16 ரன்) என அனைவரும் ரன்ரேட்டை தொடர்ந்து தேவையான அளவில் வைத்திருந்தனர்.

மும்பை அணியில் இன்று சரியாக விளையாடதவர்கள் சூர்யகுமார் யாதவ் (பூஜ்யம் ரன்), மற்றும் நெஹல் வதேரா (1 ரன்) இருவரும்தான். கடைசி கட்டத்தில் நமன் தீர் (28 பந்துகளில் 62 ரன், 4 ஃபொர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார்.

இருப்பினும் 20 ஓவர்களில் மும்பை அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை பெங்களூருவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். நாளை பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 

17.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிஆவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
சென்னை1376140.528
டெல்லி147714-0.377
லக்னோ147714-0.667
பெங்களூரு1367120.387
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை144108-0.318

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.