spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்பஞ்சாங்கம்பஞ்சாங்கம் மே 04 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் மே 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

- Advertisement -
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – மே 04

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம் சித்திரை ~ 21 (4.5.2024 ) சனிக்கிழமை*
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த* ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.09 pm வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 7.48 pm வரை பூரட்டாதி பின் உத்திரட்டாதி
யோகம் ~ மாஹேந்திரம்
கரணம்~ பவம் பாலவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 5.57
சந்திராஷ்டமம் ~ 2.11 pm வரை கடகம் பின் சிம்மம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ ஏகாதசி
இன்று ~ ஏகாதசி
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (04-05-2024) ராசி பலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதிற்கு இதமான சில செய்திகள் கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் விற்பனையை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். உழைப்புக்கு உண்டான உயர்வு தாமதமாக கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : வேறுபாடுகள் விலகும்.
பரணி : நெருக்கடிகள் குறையும்.
கிருத்திகை : காலதாமதம் ஏற்படும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.
ரோகிணி : புரிதல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : தாமதங்கள் விலகும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


இறைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில் சார்ந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.
புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தன வரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : தெளிவுகள் உண்டாகும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


உத்தியோகப் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்சிவப்பு நிறம்

மகம் : சோர்வான நாள்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : பொறுமை வேண்டிய நாள்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளின் வழியில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் மூலம் மாற்றம் ஏற்படும். சுபகாரிய விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


பூர்வீக சொத்து விஷயங்களில் திடீர் திருப்பம் உண்டாகும். மறைமுகப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றம் விலகி தெளிவு ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : திருப்பங்கள் உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : தெளிவு ஏற்படும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : சந்திப்பு ஏற்படும்.
கேட்டை : மதிப்பு மேம்படும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


தடையாக இருந்தவர்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள். தாயார் வழியில் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

மூலம் : விரயங்கள் ஏற்படும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : தாமதமாக கிடைக்கும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகள் சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
திருவோணம் : தனவரவு கிடைக்கும்.
அவிட்டம் : திறமை வெளிப்படும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


தன நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த குழப்பம் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : வேறுபாடுகள் விலகும்.
சதயம் : குழப்பம் நீங்கும்.
பூரட்டாதி : பொறுப்பு கிடைக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் இருக்கவும். கமிஷன் தொடர்பான விஷயங்களில் சூழ்நிலையை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். மேடைப்பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : பொறுமையுடன் இருக்கவும்.
உத்திரட்டாதி : திட்டமிட்டு செயல்படவும்.
ரேவதி : நெருக்கடியான நாள்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

  • ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe