உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம் தான் நினைவுக்கு வரும் – இதுவரைக்கும் அதிகமான உயிர்களை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்க்குத்தான் பலி கொடுத்திருக்கின்றன உலக நாடுகள்!

இந்தியாவில் கூட அதிகமான உயிர்களை பலி வாங்கியது, வாங்கிக் கொண்டிருப்பது இஸ்லாமிய தீவிரவாதம் தான் – இவை எல்லாம் அனைவருக்கும் தெரியும் !

ஆனால், இந்த எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து நீக்க வேண்டும். அடுத்ததாக, இந்துத் தீவிரவாதம் இருப்பதாக நம்ப வைக்க வேண்டும்!

அதற்காக இந்த இந்து விரோத காங்கிரஸில் இருந்து நேற்று முளைத்த காளான் கமலஹாசன் வரையில் காவித் தீவிரவாதம் – ன்ற வார்த்தையத் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள் – -அது மட்டும் அல்ல…

இப்படி ஒரு பொய்யை நம்ப வைப்பதன் மூலமாக உண்மையில் பயங்கரவாதச் செயல்களை செய்யும் முஸ்லிம் தீவிரவாதிகளைக் காப்பாற்ற முடியும் என்பது முக்கிய நோக்கம் – இப்பொழுது சில சம்பவங்களைப் பார்ப்போம்!

புரிந்து கொள்ள முடிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்!

காந்தி கொலையில் RSS க்கு நேரடி தொடர்பு இருக்குன்னு சொன்னதுல இருந்து ஆரம்பிக்குது இந்த கோயபல்ஸ் வேலை –

அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி இறுதியில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் ராகுல் – அடுத்து…

கோத்ரா ரயில் எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களையும் நாம் அனைவரும் அறிவோம் –

பலரும் அறியாத ஒரு தகவல் கூறுகிறேன் –

மன்மோகன் அரசில் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சராகப் பதவியேற்ற உடனே செய்த ஒரு நல்ல காரியம் என்ன தெரியுமா? – கோத்ரா ரயில் எரிப்பு பற்றி ஒரு விசாரனைக் கமிஷன் அமைத்தார்- அந்தக் கமிஷனும் பத்தே நாட்களில் அறிக்கை தாக்கல் செய்தது – என்னவென்று?

ரயில் எரிந்தது விபத்தால் அதாவது மின் கசிவால் தான் என்று _ (நல்ல வேளை பெட்டியில் வந்த கரசேவகர்கள் தங்களைத் தாங்களே தீ வைத்து எரித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறவில்லை)

இன்று ரயிலை எரித்த முஸ்லிம் குற்றவாளிகள் குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்!

அப்படியானால் இவர்களின் நோக்கம் என்ன? இங்கே, இல்லாத காவித் தீவிரவாதம் இருப்பதாக நிரூபிக்க வேண்டும் – அதற்காகத்தான் சாத்வி ப்ரக்யா சிங், கர்ணல் புரோகித் போன்றவர்களைப் போலியாகக் கைது செய்து 9 வருடங்கள் சிறையில் வைத்துச் சித்திரவதை செய்தார்கள்!

இன்று அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர் – அப்படியானால் மாலேகானிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸிலும்,அஜ்மீர் தர்காவிலும் குண்டு வைத்த இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ன ஆனார்கள் ?

அடுத்து மும்பை தொடர் தாக்குதல் நடத்தி 166 அப்பாவிகள் சம்பவத்திலும் காவித் தீவிரவாதம் என்று பழிபோடப் பார்த்தார்கள் – பிடிபட்ட கசாபை RSS – ஆள் என்றே திக்விஜய்சிங் கூறினார்!

ஆனால், அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்ற ஆதாரம் கிடைத்தவுடன் நவ துவாரங்களையும் மூடிக் கொண்டனர் !

இதே போன்றுதான் கெளரி லங்கேஷ் படுகொலையைப் பற்றி பல நாட்கள் விவாதம் நடத்தி காவி தீவிரவாதம் என்று திட்டித் தீர்த்தனர்- இறுதியில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் காவி இல்லை!

இது போன்று ஆயிரம் சம்பவங்களைக் கூறலாம் –

ஒரிஸாவில் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட வயதான கன்னிகாஸ்திரி
ரயிலில் இடத் தகறாரில் கொல்லப்பட்ட முஸ்லிம் சிறுவன்
தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா-

என்று ஏராளமான பழிகளை காவிகள் மீது சுமத்தி இவர்கள் காப்பாற்றத் துடிப்பது யாரை என்று புரிந்து கொள்ளுங்கள்

கேவலம் ஓட்டு வங்கிக்காக சிறுபாண்மையினரை திருப்திப்படுத்த இந்த மண்ணின் மைந்தர்களை அசிங்கப் படுத்தும் கேடுகெட்ட அரசியல்_

உலகின் எந்த இன மக்களுக்கும் இந்தத் துயரம் நடக்கவே நடக்காது – அதுவும் சொந்த அரசாங்கமே மண்ணின் மைந்தர்கள் மீது பழி போடுவது!

இதைத் தான் இங்கே ஸ்டாலின் உட்பட கேடுகெட்ட அரசியல்”வியாதிகள்” செய்து வருகிறார்கள் – காவியை காலி செய்யப் போவதாக சூளுரை இடுகிறான்கள்!

காவி என்றால் தியாகம் என்று அறியாத நடுநிலை ஹிந்துக்கள் கைதட்டுகிறான்கள் –

ஏற்கனவே இவன்கள் ஆதரவில்தான் கோவையில் குண்டு வைத்து 58 அப்பாவிகளைப் படுகொலை செய்தார்கள் இஸ்லாமியர்கள்.

நமது நாட்டு வீணாய்ப் போன சட்டங்களால் குண்டு வைத்த ஒரு தீவிரவாதியின் உயிரைக் கூட எடுக்க முடியவில்லை!

அவ்வளவு ஏன்? வேற்றுக் கட்சித் தலைவராக இருந்தாலும் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த விடுதலைப் புலிகளையும் அந்தச் சதியில் பங்கு கொண்ட முருகன், பேரறிவாளன் உட்பட்ட தீவிரவாதிகளையும் இன்று வரை நாம் எதிர்த்து வருகிறோம்! ஆனால், ராகுல் உட்பட இடதுசாரிகள், திமுக, திரிணாமுல், பகுஜன் போன்ற கட்சிகள் செய்வது எந்த மாதிரியான அரசியல் என்று புரியவில்லை!

அவர்களுக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள் – நாடாளுமன்றத் தாக்குதல் நடத்திய அப்சல் குரு, மும்பைத் தாக்குதல் நடத்திய அப்துல் கசாப் போன்ற தீவிரவாதிகளைத் தூக்கில் இட்டபோதே இவர்கள் எல்லாம் பொங்கி எழுந்ததையும், ஊடகங்கள் பல நாட்கள் விவாதம் நடத்தியதையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.

அதிலும், தமிழக ஊடகங்கள் சொல்லவே வேண்டாம்… இன்று நமது இராணுவ வீரர்களுக்கு நடந்த மிகப் பெரிய அநீதிக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்தைக் கூட – பா.ஜ.க வின் தேர்தல் யுக்தி என்று வாய் கூசாமல் பழிக்கின்றனர்!

பதிலடியா, அரசியலா என்று விவாதம் நடத்துகின்றனர்!

தீவிரவாதத்திற்கு எதிரான போரை இந்து – முஸ்லிம் போராக மாற்ற நினைக்கிறார்கள்! அதற்கு இங்கே இருக்கும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் ஆதரவாகப் பேசி வருவதே சாட்சி!

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பில் இருப்பதும், அந்த நாட்டிற்கு ஆதரவாகப் பேசி வருவதையும் நாம் பல வருடங்களாகப் பார்த்து வருகிறோம். இப்பொழுதும் கூட இந்துக்களுக்கு தாங்கள் எப்படிப்பட்ட அபாயத்தில் இருக்கிறோம் என்பது புரியாவிட்டால், இறைவன் விட்ட வழி!

– ந.முத்துராமலிங்கம்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...