spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசூர்யா ... இதற்கு நீங்கள் தேவையே இல்லை!

சூர்யா … இதற்கு நீங்கள் தேவையே இல்லை!

- Advertisement -

ஒரு காலத்தில் எனக்கும் சூர்யாவை பிடித்திருந்தது.. தான் சுமார் மாணவனாக இருந்தாலும்.. மற்ற மாணவர்களின் படிப்புக்காக அறக்கட்டளை நிறுவிய சூர்யாவை சத்தியமாக ஒரு காலத்தில் பிடித்திருந்தது. அகரம் அறக்கட்டளை சார்பாக பேசியதில் நான் அவரின் கருத்துக்களோடு எத்தனை விலகிவிட்டேன் என்பது தெரிந்தது.

கல்விக்கொள்கை என்பது நிலையான சேறோ.. சகதியோ அல்ல. ஓடும் ஆறு.. மாறவேண்டும்..அதன் மாற்றங்கள்.. இந்த தேசத்தை முன்னேற்றுகிறது. இதன் பயன் யாருக்கு போகிறது..? யாரிடமிருந்து என்பதில்தான் சில அளவீடுகளும் அதன் மீதான ஒரு ஒப்பீடும் இருக்கவேண்டும்.

அரசு பள்ளிகளில் ஏன் ஆசிரியர் இல்லை என்பதே அசிங்கமான விஷயம். இதை கேட்பதில் எந்தவித தவறும் சூர்யாவின் மீது இல்லை. ஆனால் அதோடு நீட்டை முடிச்சுபோடுவது முட்டாள்தனமானது. அப்படி ஆசிரியர் இல்லாத பள்ளி மாணவர்கள்.. நீட்டைவிட கடினமான +2 வை எப்படி படித்து தேறுகிறார்கள்..? எத்தனை தேர்வுகள் மாணவர்கள் எழுதுவார்கள் என்பதிலும் அர்த்தமில்லை.. என்ஜினீயரிங் படிக்க ஆசைப்படுபவனோ.. அல்லது ஆங்கில இலக்கியம் பயில ஆசைப்படும் மாணவனோ.எதற்கு நீட் தேர்வை பற்றி கவலைப்பட வேண்டும். ஐஐடி தேர்வு பற்றி வேண்டுமானால் கவலைப்படலாம். இப்படி ஒரு தேர்வே இல்லையென்றால்.. தனியார் கல்லூரிகளின் அட்டகாசம் புரியாதா நமக்கு..? இப்படி ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி மிக கடினமான மருத்துவத்தை படித்து பாஸாவார்கள்..?

மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு போன்ற அறுதப்பழசான கொள்கைகளை இப்போது தூசிதட்டி வீரமாய் பேசுவதிலும் எந்த அர்த்தமுமில்லை. சுமார் மூஞ்சி குமார்கள் இங்கு பொங்குவார்கள்.. ஆனால் தென்னக மக்கள் புலம் பெயர்வது அதுவும் வடக்கு நோக்கி நகர்வது புதியதில்லை. ஆனால்.. வளர்ச்சியின் முழுச்சுற்றில் பெங்கால் பீஹார் உபி ஒதிஷா மக்கள் இப்போது தெற்குக்கு புலம் பெயர்கிறார்கள். ஆனாலும் இப்படி மூன்று மொழி.. அது ஹிந்தியோ, கன்னடமோ, மலையாளமோ, எதுவுமே ஓகே படிக்கலாம் தவறே இல்லை.. அதுவும் இள வயதில்.. அதை நிறுத்த வேண்டும் கூடாது என்றால்.. திராவிடர்கழக கண்மணிகள் நடத்தும் தனியார் பள்ளிகளையும் மூடிவிடுங்கள். ஏன் இப்படி இரண்டு நிலைப்பாடு. கேட்டால் ஒன்று கொள்கை.. இன்னொன்று அக்கட்சியனரின் தொழிலாம். இதற்கு வேறு புராதான தொழில் ஏதாவது செய்யலாம்.

ஆசிரியர்களை நியமிக்கலாம். அதிக சம்பளம் தரலாம். அவர்களின் தரத்தை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பரிசீலிக்கலாம். ஆசிரியரே ஃபெயில் என்றால்.. போகச்சொல்லிவிடலாம். நிலையான உத்யோகம் பற்றிய எண்ணமே கொட்டாவி வர வைக்கிறது. முதலில் ஆசிரியரை ஓட விடுங்கள்.. அப்புறம் பாருங்கள்..

மாணவனை ஆன்லைனில் அவன் முன்னேற்றத்தை தினப்படி ட்ராக் செய்யும் அளவிற்கு சாஃப்ட்வேர் வந்தாகிவிட்டது. அரசு பள்ளிகளை முன்னேற்றிய எத்தனையோ ஆசிரியர்களை தெரியும். பள்ளியில் நீட், என்ஜினீயரிங்.. போன்ற தேர்வுகளுக்கு பாடம் நடத்துவதை ஊக்குவிப்பது விட்டு.. அனைத்தையும் குற்றம் சொல்வதில் ஏதும் நடக்கப்போவதில்லை.

சமச்சீர் கல்வியை தலை முழுகலாம். நிறைய விஷயங்களை செங்கோட்டையன் சத்தமில்லாமல் செய்கிறார். ஆனால் இன்னும் கொள்கைகள், மற்றும் பள்ளி, கட்டிடம், ஆசிரியர், மாணவன் வளர்ச்சிகள் என்று நிறைய செய்யலாம். கருப்புப்பலகை தாண்டி.. சிந்திக்கவேண்டும். Interactive classrooms, webminar.. மூட்டை சுமக்க கூடாது என்று cupboard தந்து அரசுப்பள்ளிகளை மாற்றிப்பாருங்கள்.. தனியார் மோகம் குறையும். வாரப்படி.. மாதப்படியான பொட்டி தாண்டிய சிந்தனைகளே கல்வியை வளர வைக்கும்.

என்னைப்போல்.. சூர்யா போல்.. தெருவில் போவோர் எல்லாம் சொல்லும் குறைகளால் கல்வியின் தரம் உயரப்போவதில்லை. ஆனால் மாநில அரசு வேகமாய் செயல்படுதல் அவசியம்.

உடனே உபியில் கல்வித்தரம் என்று கேள்வி கேட்காதீர்கள். சாமியாரின் ஊரில் கல்வியின் தரம் மிகவும் கடினம். CBSE பரவாயில்லை என்று அலறுகிறார்கள். அப்படி செய்யுங்கள். 99.9 வாங்கி வேலைக்குதவாத ஒரு மாணவனைவிட முதல் கிரேடு மாணவனால் நல்ல அவுட்புட் தர முடிகிற பட்சத்தில்.. இந்த எலி ஓட்டங்கள் தேவையே இல்லாதது.

சாரி சூர்யா.. படம் பண்ணுங்கள்.. கொள்கைகளை அரசிடம் விடுங்கள். படம் ப்ளாப்பான பாதிபேர் தெருவில் சங்கிலி போட்டு போராளியாக அலைவதைப்போல் உங்களை பார்க்க பிடிக்கவில்லை. நீங்கள் என்னைப்போல் சுமார் மாணவன்தான்.. ஆனால் அதிக உதவிகள் செய்வதால்.. உங்களின் மீதான மதிப்புண்டு..

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க பலர் இருக்க நீங்கள் தேவையே இல்லை.

– பிரகாஷ் ராமசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe