திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ரமணா நகரில் வசித்து வருபவர் தெய்வானை. இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இரு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போட்டிருக்கவும் முகம் சரியாக தெரியவில்லை.
தெய்வானையிடம் வரும் போது வண்டியை மிதமாக்கி அவர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.
5 சவரன் செயின் என்பதால் அதை அவர்களால் பறிக்க முடியவில்லை. ஆனால் இதற்குள் தெய்வானை திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இந்த சத்தத்தை கேட்டதும் அந்த பகுதி மக்கள் இரு இளைஞர்களையும் பின்னாடியே துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
பிறகு அவர்களின் கைகளை பின்புறமாக கயிற்றால் கட்டி தர்ம அடி கொடுத்தனர். “யாரு நீங்க என்றும் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் விசாரித்தனர் முட்டி போடு என அங்கிருந்தோர் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு இளைஞர்கள், தண்டையார்பேட்டை என்று சொன்னவுடனே,
தெய்வானை கோபம் கொண்டு தண்டையார்பேட்டையில இருந்து இங்கே எதுக்கு வருகிறீர்கள் என்றுக் கேட்டார். செயின் அறுக்கும்போது உயிர் போயிடுச்சுன்னா எங்கிருந்துடா வரும்? உங்களுக்கு சொந்தமா சம்பாதிச்சு சாப்பிட தெரியாதா” என்று சொல்லி இருவரையும் சாரமாறியாக கேள்வி கேட்டிருக்கிறார்.
தங்களை விட்டுவிடும் படி இருவரும் கெஞ்சி அழுதார்கள். அதற்குள் மீஞ்சூர் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுக்கவே, காவல் துறையினர் விரைந்து வந்தனர். தெருவில் முட்டி போட்டுக் கொண்டிருந்த 2 மாணவர்களையும் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பிரசாந்த் என்பதும், இவர்கள் 2 பேருமே கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் செலவுக்கு காசு இல்லாததால் தான் செயின் பறிக்க முயற்சித்தோம் என்று போலீசாரிடம் சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடக்கிறது.



