இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

election voting - 2026

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகுிறது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி என உள்ளது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில், சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது. இதற்காக எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்றது. 

இதன் பின்னர் டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதன்பின்  5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர்.  

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் கடந்த 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள்; பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதை அடுத்து, அந்த மனுக்களை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. 

மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான  மாவட்ட ஆட்சியர்கள் இன்று பட்டியலை வெளியிட்டனர். அதன்படி,

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 12,64,411 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,18,063 பேரும், பெண் வாக்காளர்கள் 6,46,180 பேரும், மூன்றாம் பாலினம் 168 பேரும் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 23ம் தேதி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,92,194 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,76,299 வாக்காளர்களும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூர்- 3,75,921, உத்திரமேரூர்- 2,43,922, ஆலந்தூர்- 2,9,052 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 15,10,550 ஆக உள்ளது,. இவர்களில், ஆண்கள்- 7,51,016 ; பெண்கள்- 7,59,390 ; 3ம் பாலினம்- 144

* தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் படி, வாக்காளர்கள் எண்ணிக்கை- 13,6,624. ஆண்கள்- 6,71,742 பெண்ள்- 7,0,689 3ம் பாலினத்தவர்-193 வாக்காளர்ள் உள்ளனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

*செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 22,60,03 ஆண்கள்- 11,04,511 பெண்கள்- 11,55,144, 3ம் பாலினம்- 381 வாக்காளர்கள் உள்ளனர். 

* விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் படி, வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417. ஆண்கள்- 7,28,539 பெண்கள்- 7,68,62 3ம் பாலினம்- 246 வாக்காளர்கள் உள்ளனர்.

* நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண் வாக்காளர்கள், 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 பேர்.

* சிவகங்கையில் ஆண் வாக்காளர்கள் -5,44,035, பெண் வாக்காளர்கள்- 5,66,526, மூன்றாம் பாலினத்தவர்கள்-38, மொத்த வாக்காளர்கள்-11,10,599.

* சேலத்தில் ஆண் வாக்காளர்கள் – 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள்-27,55,830.

* திருச்சியில் ஆண் வாக்காளர்கள் – 10,31,354, பெண் வாக்காளர்கள்- 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள்-21,26,303.

* கடலூரில் ஆண் வாக்காளர்கள் – 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள்-20,15,196.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

* கோவையில் ஆண் வாக்காளர்கள் – 13,00,889, பெண் வாக்காளர்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள்- 26,96,813.

* சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை- 27,55,830. ஆண்கள்-13,84,548 பெண்ள்- 13,70,962 3ம் பாலினத்தவர்- 320 பேர் உள்ளனர்.

தொடர்ந்து மாவட்டம் வாரியான புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. மாநிலம் முழுதும் உள்ள இறுதி வாக்காளர் விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories