ஏப்ரல் 21, 2021, 5:03 மணி புதன்கிழமை
More

  மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி! விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்!

  Screenshot_2020_0807_102353
  Screenshot_2020_0807_102353

  தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக தன்னை பிரபலப்படுத்திக் கொள்பவர் மீரா மிதுன். மூச்சுக்கு முன்னூறு தடவை சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் இவர் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக விஜய் மற்றும் சூர்யாவை வம்பிழுத்து வருகிறார்.

  விஜய்யின் மெர்சல் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை மூடி விட்டதாக கூறியுள்ளார். மேலும் பிகில் படம் நஷ்டம் என அர்ச்சனா கல்பாத்தி அக்கா ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என தெரிவித்திருந்தார்.

  மேலும் சூர்யாவின் குடும்பமே நாடகமாடும் குடும்பம். திருமணத்திற்குப் முன்னர் ஜோதிகா எப்படி இருந்தார்? அவருடைய கருப்பு பக்கம் என்ன என்பது தமிழ் சினிமாவிற்கு தெரியும் என தெரிவித்திருந்தார்.

  நாளுக்கு நாள் மீரா மிதுன் அட்டகாசம் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் கடுப்பான விஜய் ரசிகர்கள் அவருக்கு மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இனியாவது மீராமிதுன் தன்னுடைய ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »