காதலர்களை வீட்ற்குள் பூட்டி தீ வைத்து கொலை! பெண்ணின் தந்தை செய்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
fire

பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் போலா மற்றும் 19 வயது பெண் பிரியங்கா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக இருவரும் முன்புபோன்று அடிக்கடி சந்திக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் தனது காதலியை பார்க்க வேண்டும் என திட்டம்போட்டு, பிரியங்காவை அவரது வீட்டில் வைத்து போலா சந்தித்துள்ளார்.

இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் ;மற்றும் உறவினர்கள், காதலர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, மண்ணெண்ணெயை அறைக்குள் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இதில் போலா மற்றும் பிரியங்கா தீயில் துடிதுடித்து கருகி இறந்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரியங்காவின் தந்தை, தாயார், சகோதரர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் பெண்ணின் உறவினர்கள் மேலும் ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

lovers

போலா மற்றும் பிரியங்கா இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடூரம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இச்சம்பவம் தொடர்பாக கூறிய பண்டா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திர பி சவுகான், பிரியங்காவை வேறொருவருக்கு திருமணம் செய்து முடிக்க அவரது பெற்றோர் பேசி வந்தனர். ஆனால் திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் காதலனுடன் இருப்பதை பார்த்துள்ளனர்.

இதனால் இருவரையும் அவர்கள் எரித்துக்கொலை செய்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.