கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் அதன்பின் தியேட்டர்கள் திறக்கப்படலாம்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நள்ளிரவில் ஆரம்பமான இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை இருக்கும்.இதனால், அடுத்த 21 நாட்களுக்குத் தியேட்டர்கள் திறக்கப்பட மாட்டாது.
ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘மாஸ்டர், சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களின் வெளியீடு இதனால் நிச்சயம் தள்ளிப் போகும்.21 நாட்களுக்குள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் அதன்பின் தியேட்டர்கள் திறக்கப்படலாம்.
ஒருவேளை அரசாங்கம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மேலும் தடை விதித்தால் அதன் பிறகும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மட்டும் தொடர்ந்து மூடி வைக்க உத்தரவிடலாம். அப்படி ஏதாவது நடந்தால் ஏப்ரல் மாதம் முடிய புதிய படங்கள் வெளிவர வாய்ப்பிருக்காது.மே மாதத்தில் தான் புதிய படங்களை வெளியிடும் சூழல் உருவாகும்.
இருந்தாலும் படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் திட்டமிட்டபடி முடிந்திருக்க வேண்டும். அவற்றை மீண்டும் ஆரம்பிக்கவே 21 நாட்கள் ஆகும் என்பதால் அனைத்துப் படங்களின் வெளியீடும் தள்ளிப் போகும்.