Homeதலையங்கம்தீர்வு... ஹிந்துக்களின் ஒற்றுமையே!

தீர்வு… ஹிந்துக்களின் ஒற்றுமையே!

ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏங்கும் அரசியல் தலைவர்கள் நிரந்தரம் அந்த வேற்றுமையை ‘செக்யூலர்’ என்ற சொல்லின் மறைவில் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே

hinduism - Dhinasari Tamil

நேரம் கடந்து போகிறது! தாமதிக்க வேண்டாம்!!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்

அரசாட்சியில் மத வேற்றுமை காட்டக் கூடாதென்பது குடியரசாட்சியில் முக்கியமான அம்சம். ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஏங்கும் அரசியல் தலைவர்கள் நிரந்தரம் அந்த வேற்றுமையை ‘செக்யூலர்’ என்ற சொல்லின் மறைவில் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே வருகிறார்கள்.

தாம் தேசத்தை ஆளவேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களின் மேல் எதிர்க்கட்சிகள் கடும் விமரிசனத்தோடு நடந்து கொள்வது ஒவ்வொரு கட்சிக்கும் இயல்பே. ஆனால் எதிர்க்கட்சிகள் ஹிந்து தர்மத்திற்கு துணையாக உள்ளார்கள் என்ற எண்ணத்தோடு இங்குள்ள கட்சித் தலைகள் (ஹிந்துக்களாக இருந்தாலும் கூட) ஹிந்துமத துவேஷத்தை வளர்த்துக் கொண்டு ஹிந்து மத எதிர்ப்பை ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் வெளிப்படுத்துகிறார்கள். அதில் ஒரு பகுதியாக ஹிந்துவல்லாத மதங்களை எல்லை மீறி கொஞ்சி, அவர்களின் அக்கிரமங்களை நியாயப்படுத்துவதோடு அவற்றுக்கு உதவியும் செய்து வருகிறார்கள்.

தம் பண்டிகைகளின் போது ஹிந்துக்கள் உற்சாகமாக உற்சவம் செய்துகொண்டால் கற்களை வீசி கலகத்தில் ஈடுபடுவது பல இடங்களில் நடக்கிறது. அதனைத் தடுப்பது பெரும்பாலும் நடப்பதில்லை. சில மாநிலங்களில் தகுந்த விதத்தில் தண்டனை அளித்தாலும் அந்த மாநிலங்களில் அதிகாரத்தில் இருப்பது இவர்கள் நினைக்கும் ஹிந்துதத்துவ எண்ணங்கள் கொண்ட தலைவர்களே. ஆனால் அவர்களை ஹிந்துமதத்தை ஏற்பவர்கள் என்று கூறுவதை விட அரசியல் சட்டப்படி சர்வமத சம எண்ணம் கொண்டவர் என்றே குறிப்பிட வேண்டும்.

தாம் சுயமாக ஹிந்துக்களே ஆனாலும் பிற மதங்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்று பிற மத பண்டிகைகளின் போது அவர்களைப் போல் வேஷமணிந்து அவர்கள் அளிக்கும் விருந்துகளை உண்டு மகிழ்வது நாடகமே அன்றி வேறென்ன? அந்த வேஷங்களை அணியாமலே பிறருக்கு அவர்களின் விழாக்களை நடத்திக் கொள்ளத் தேவையான பாதுகாப்பும் வசதியும் ஏற்படுத்துவது பெருமை அளிக்கும் செயல். அந்தப் பெருமை ‘ஹிந்து மத எண்ணம் கொண்டவர்கள்’ என்று அழைக்கப்படும் தலைவர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. அல்லது ஹிந்து மத எண்ணம் இருப்பதால்தான் சமத்துவம் சமரசம் பொறுமை ஒன்றிணைந்து வாழ்வது போன்றவை சாத்தியமாகிறது என்று கூறலாம்.

மீதி பிற இடங்களில் ஹிந்துக்களின் மேல் தாக்குதல் நடந்தாலும் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதோடுகூட ஆதாரமின்றி பல ஹிந்துக்களை சிறைப்படுத்தினர்.

காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் வெளிவந்தபின் மத வெறுப்புகள் வெளிப்படும் என்று சிலர் கருத்துரைத்தாலும் அரசியல்வாதிகள் எதிர்த்தாலும் எங்கும் எந்த கலகமோ போராட்டமோ வெடிக்கவில்லை. ஏனென்றால் அதில் காட்டிய பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதால். அந்த பாதிக்கப்பட்ட இடத்தில் பிற மதத்தவர் இருந்திருந்தால் இந்நேரம் எப்படிப்பட்ட போராட்டங்கள் வெடித்திருக்குமோ!

தம் மதத்தின் மேல் வலுவான பற்று, ஒற்றுமை ஹிந்துக்களுக்கு இல்லை என்றும். வராது என்றும் தீர்மானமான நம்பிக்கையோடு இந்த தலைவர்கள் பிறருடைய திருப்திக்காக ஹிந்துக்களின் மேல் நடந்த தாக்குதல்களை கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் உற்சாகப்படுத்துகிறார்கள் கூட. ஒரு கட்சியின் மேல் எதிர்க்கட்சி எண்ணத்தோடு ஹிந்து வெறுப்பையும் எதிர்ப்பையும் தம்மில் நிரப்பிக் கொண்டு தம் நடத்தையில் காட்டுவது ஏற்க இயலாத செயல். மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை இதற்கு முக்கிய உதாரணங்களாகக் கூறினாலும் இன்னும் பல் மாநிலங்கள் இந்த வகையைச் சேர்ந்தவையாக உளளன. ஹிந்துவல்லாத பிறருக்கு சம்பளத்தையும் விருதுகளையும் அதிகமாக அள்ளிக் கொடுக்கிறார்கள்.

இந்த கட்சிகள் ஹிந்து மதத்தை பரஸ்பரம் வெறுப்போடு இக்கட்டுக்கு ஆளாக்கினால் அதற்கு பெரிய நஷ்டத்தை செலுத்த வேண்டி வரும். ஊடகங்கள் கூட தாம் சார்ந்த கட்சிகளுக்காக ஹிந்து வெறுப்பை வெளிப்படுத்துகின்றன.

ஆன்மீக சாதனைக்கும் தனிமனித ஒழுக்கத்துக்கும் மட்டுமே மதத்தை நெருங்கும் ஹிந்துக்களுக்கு மதத்தை அரசியலுக்காகவோ, சமுதாயத்தில் புகழ் பெறுவதற்கோ பயன்படுத்தும் சுபாவம் இல்லை. இந்த எண்ணம் மாற வேண்டும். பிறரை ஹிம்சை செய்யாமல், மாற்றாமல், அவரவரை அவரவர் வழியில் வாழ விடுவது ஹிந்து மதம். இந்த வழிமுறை பிறருக்கும் இருந்தால் அனைத்து மதங்களும் சமரசத்தோடு இருக்கும். அவ்வாறின்றி அக்கிரம முறையில் எதிரி நாடுகள் தம் மதத்தவரை லட்சக்கணக்காக நம் தேசத்திகுள் அனுப்புகின்றன. அவர்களுக்கு அரசியல் தலைவர்களின் உதவியோடு திருட்டு அடையாள அட்டைகள் சம்பாதித்து வாக்காளர்களாக மாற்றிய ஹிந்துவல்லாத பிற மதங்களின் ஆக்கிரமிப்பும், அவர்களுக்கு தலைவர்கள் செய்யும் உதவிகளும் தெளிவாகத் தெரிகின்றன.

இந்த பின்னணியில் தேசத்தின் முழுமையான நலனுக்காகவது ஹிந்துக்கள் தம் ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவாக அரசியல் தலைவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தம்மை எதிர்ப்பவர்களுக்கும் தம்மை எதிர்ப்பவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் சரியானபடி பதிலடி கொடுக்கவேண்டிய பொறுப்பு ஹிந்துக்கள் அனைவருக்கும் உள்ளது. இல்லாவிட்டால் விரைவில் தம் இருப்புக்குத் தாமே ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ஆவார்கள். தமக்கு மட்டுமின்றி தம் தேசத்தின் பாதுகாப்புக்கும் முழுமைக்கும் கூட இடையூறு எற்படுத்தியவராவார்கள்.

இப்போதே மதத்தை ஒட்டி தேசம் மூன்று துண்டுகளாவதற்கு காரணமான ஹிந்துவல்லாத பிற மதங்கள் மேலும் துண்டாக்குவதற்கு தயாராகி வருகின்றன. அதற்குத் துணையாக தம்மவர்களை படைகளாக சேர்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்த பிரச்சினையை அடையாளம் கண்டு தகுந்த ஜாக்கிரதைகள் எடுத்துக் கொள்ளாவிட்டால்  தேசத்தின் எதிர்காலத்திற்கும் அமைதிக்கும் ஆபத்து விளையும்

இதற்கு தீர்வு ஹிந்துக்களின் ஒற்றுமையே!

(ருஷிபீடம் தலையங்கம் -ஜூன் 2022)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,337FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...