spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 18): அதி பரிசய நியாய: - அதிக பழக்கம் அலட்சியத்திற்கு...

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 18): அதி பரிசய நியாய: – அதிக பழக்கம் அலட்சியத்திற்கு ஹேது!

- Advertisement -
samskrita nyaya

தெலுங்கில்: பி,எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

அதி பரிசய நியாய: – அதிக பழக்கம் அலட்சியத்திற்கு ஹேது.
(அதி –அளவுக்கு அதிகமான, பரிச்சயம் –தொடர்பு)

நமக்கு மிகவும் பழக்கமான மனிதர்களின் மதிப்பும் அவர்களின் சிறப்பும் நமக்குத் தெரியாது. அதிகம் பழக்கமுள்ள பொருட்களின் மதிக்கு நமக்குப் புரியாது. அதுவே அதி பரிச்சய நியாயம் (Excessive Familiarity).

அதிபரிசயாதவஞ்ஜா சந்தத காமனாதனாதரோ பவதி |
மலயே பில்ல புரந்த்ரீ சந்தன தருகாஷ்டமிந்தனம் குருதே ||

– பண்டித ராஜ சதகம்

பொருள்:- அளவுக்கதிகமான தொடர்பால் அலட்சியம் ஏற்படுகிறது. அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தால் அவமரியாதை ஏற்படுகிறது. இந்த சுலோகம் அதிக பரிச்சயம் மரியாதையைக் குறைக்கிறது என்று போதிக்கிறது. மலய பர்வதத்தின் மேல் வசிக்கும் வேடுவப் பெண்கள் நல்ல சந்தனக் கட்டைகளை அடுப்பு எரிக்கும் விறகாகவோ குளிர் காய்வதற்கோ பயன்படுத்துவதைப் பார்க்க முடியும்.

நகர வாசிகளான நாம் சந்தனக் கட்டையை அங்குலம் கணக்கில் பெரும் பணம் கொடுத்து வாங்குகிறோம் என்பது உண்மை. எங்கு பார்த்தாலும் சந்தன மரம் உள்ள காடுகளில் வசிப்பவர்களுக்கு அவற்றின் மதிப்பு தெரியாது என்பது கவிதையின் பொருள். வெளியில் இருப்பவர்களுக்கு தெரிந்த அளவு நம் வீட்டில் இருப்பவர்களின் சிறப்பு ஒரொரு சந்தர்பத்தில் நமக்கே தெரியாது.

ரிடைர்மென்ட் வாங்கும்போது ஏற்பாடு செய்த மேடையில் அலுவலகத்தில் பணி புரியும் சக உத்தியோகிகள் குறிப்பிட்ட மனிதரை அத்தனை உயர்ந்தவர் இத்தனை சிறந்தவர் என்று புகழும்போது குடும்ப அங்கத்தினர்கள் அப்படியா என்று வியந்த சந்தர்பங்கள் பலப்பல அதுபோன்ற ஒரு சம்பவம் அண்மையில் சென்னையில் நடந்தது. அதிக பரிச்சய நியாயத்தை உணர்த்தும் உதாரணமாக அது விளங்கியது.

அது ஒரு பரோபகாரியின் கதை. அவர் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர். அவருடைய மனைவிக்கு தன் கணவர் ஒரு தொழிற்சாலையில் சிறிய சம்பளம் வாங்கும் தொழிலாளி என்றுதான் தெரியும். ஆர்எஸ்எஸ் மூலம் நடக்கும் சேவை நிகழ்ச்சிகளுக்கு அந்த மீட்டிங் இந்த மீட்டிங் என்று என்று அலைவார் என்று தெரியும். ஒரு பைசா வருமானம் இல்லாத வேலைகளைச் செய்வார் என்று மனைவி அவர் மேல் எரிந்து விழுந்த சந்தர்பங்கள் பல.

ஒரு நாள் அவர் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அவர் பணி புரியும் தொழிற்சாலை முதலாளி அந்த சிறிய தொழிலாளியின் வீட்டுக்கு வந்து அந்த தொழிலாளியின் நேர்மையைப் புகழ்ந்து பேசி கண்ணீர் விட்டார். குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை தாம் ஏற்பதாகவும் பிள்ளைகளின் கல்விச் செலவு குறித்து கவலைப்பட வேண்டாம் என்று தைரியம் கூறி சென்றார். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அவருடைய உடலைக் காண வந்தார்கள். இறுதி விடை கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியவர்களில் தலைவர்கள், உலகப் புகழ் பெற்றவர்கள் இருந்தனர். குடும்பத்திற்கே அன்றி அவர் மரணம் சமுதாயத்திற்கே நஷ்டம் என்று போற்றி புகழ்ந்தனர். அவருடைய மனைவி வியந்து போனார். இத்தனை உயர்ந்தவரா என் கணவர் என்று ஆச்சர்யப்பட்டார். நம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் மரத்தின் அருமை நமக்குத் தெரியாது என்பது பழமொழி அல்லவா?

*****

வெளிநாட்டுப் பயணிகள் நம் கோவில் சிற்பங்களின் சிறப்பைப் பார்த்து மகிழ்வார்கள். புகைப்படமாக எடுத்துத் தள்ளுவார்கள். கைட் உதவியோடு அந்த கலைகளின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வார்கள். அதே ஊரில் இருக்கும் மக்களுக்கு அந்த அருமை தெரியாது. இது அதிக பரிச்சய நியாயத்திற்கு உதாரணம்.

****

வேப்ப மரம், மஞ்சள் போன்றவற்றுக்கு இருக்கும் சிறந்த குணங்கள் நம் மூதாதையர்களுக்கு தெரிந்த அளவு புதிய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. ஆனால் அவற்றின் அருமை நன்கு தெரிந்த வெளிநாட்டோர் அவற்றை பேடன்ட் செய்து கொள்ளவேண்டுமென்று துடிக்கிறார்கள்.

நம் தேசத்தவருக்கு வெளி தேசத்து மொழிகளைப் படிப்பதில் விருப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் வெளிநாட்டில் பதினான்குக்கும் மேலான பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருத பாஷையை கற்றுத் தருகிறார்கள். வெளிநாட்டார் விருப்பத்துடன் சமஸ்கிருத மொழியை கற்றுவருகின்றனர்.

****

தோழனான ஸ்ரீகிருஷ்ணனிடம் அர்ஜுனனுக்கு அதிக பழக்கம் இருந்தது. ஆனால் விஸ்வரூப தரிசனத்திற்குப் பிறகுதான் ஸ்ரீகிருஷ்ணனின் உண்மை சொரூபம் என்ன என்பது தெரிந்தது.

சபேதி மத்வா பிரஸபம் யதுக்தம்
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி
அஜானதா மஹிமானம் தவேதம்
மயா ப்ரமாதாத்ருபணயேன வாபி

– (பகவத் கீதை 11/144) -என்று தான் செய்த தவறுகளுக்கு வருந்துகிறான்.

பொருள்:- “ஹே கிருஷ்ணா! உங்கள் மகிமையை அறியாமல் தவறுதலாகவோ அதிக பரிச்சயத்தாலோ தோழன் என்று நினைத்து ஓ கிருஷ்ணா ஓ யாதவா ஓ சகா என்று அலட்சியமாக அழைத்தேன். தனியாக இருக்கும் போதோ பிறர் முன்னிலையிலோ பரிகாசமாக ஏதாவது கூறியிருந்தாலும் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று அர்ஜுனன் கிருஷ்ணனை பிரார்த்திக்கிறான். இது அதிக பரிச்சய நியாயத்திற்கு உதாரணம்.

ஆங்கிலத்தில் கூட Familiarity breeds contempt என்ற பழமொழி உள்ளது. அது அதிக பரிச்சய நியாயத்திலிருந்து பிறந்ததே.

****

அதிக பரிச்சய நியாயத்தை மற்றுமொரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் நமக்குத்    தெரிந்தவர்களை நாம் ஆழமாக அறிந்து கொள்வதில்லை என்பது புரியும். சாதாரண விஷயங்களை கவனிப்போமே தவிர கூர்ந்து அறிய மாட்டோம். ஹனுமானின் சிறப்பான அறிவாற்றல் சுக்ரீவனை விட ஸ்ரீராமானுக்கு முதல் பரிச்சயத்திலேயே தெரிந்ததல்லவா?.

தினமும் வகுப்பில் பார்க்கும் மாணவனின் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆழமாக பரிசீலித்துப் பார்த்தால்தான் தெரியும். இதற்கு உதாரணமாக ஐன்ஸ்டினின் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறலாம். கணக்குத் தேர்வில் தோல்வியடைந்த ஐன்ஸ்டினை ஆசிரியர் ‘ஆடு மேய்க்கத் தான் லாயக்கு’ என்று நிந்தித்தாராம். அதன் பின் அவர் உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரானார்.

****

சத்ரபதி சிவாஜி தனக்கு உதவியாக மாவலீல் என்ற வனவாசிகளின் உதவியை பெற்ற போது அனைவரும் சிவாஜியை பரிஹாசம் செய்தனர். அவர்களில் இருந்தே சிறந்த சாமர்த்தியம் மிக்க கமாண்டர்ஸ் உதித்தனர். நேதாஜி பால்கர், தானாஜி மால்சுரேல் போன்றோர் தோன்றினர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசிரியர் டாக்டர்ஜி ஹெக்டேவார் சிறு குழந்தைகளோடு விளையாடியபோது, ‘கவாரோங்கா ஹெட்’ என்று மறுப்பு தெரிவித்தனர். அவர் உலகத்தின் திசையையே மாற்றியவர்களைத் தோற்றுவித்தார்.

இந்த உதாரணங்கள் நம் மதிப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.   நமக்கு தெரிந்தவர்களில் இருக்கும் சிறப்பை அறிவது என்பது ஒரு கலை. அந்த கண்ணோட்டம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

****

தன் வீட்டில் வளர்ந்த லீலா மானுட வேடதாரியான ஸ்ரீகிருஷ்ணனை சாதாரண குழந்தையாக யசோதை நினைத்தாள். காதைத் திருகினாள், கையிற்றால் உரலோடு கட்டி வைத்தாள். அது ஒரு வித ‘அதிக பரிசசய நியாயம்’.

****

ஒருவர் வீட்டில் இரண்டு தலைமுறைகளாக ஒரு சிறு இடிக்கும் கல் இருந்தது. அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர் அதனைப் பார்த்து அது அபூர்வமான சாலக்கிராமம் என்று கூறியபோதுதான் அவர்களுக்கு அந்தக் கல்லில் மதிப்பு தெரிந்தது. இது ஒரு வித அதிக  பரிச்சய நியாயம்.

****

“சஞ்சயா! கிருஷ்ணன் சர்வ லோகேஸ்வரன் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று திருதுராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டான். “அரசே! உனக்கு கல்வியறிவு இல்லை. எனக்கு வகுப்பில் சேர்ந்து படித்த அறிவு உள்ளது. ஞானம் இல்லாமல் அறியாமையில் கிடந்தது உழல்பவனுக்கு மாதவனைப் பற்றி தெரியாது” என்று சஞ்சயன் பதிலளித்தான். வெளிப்படையாக கூற வேண்டுமானால் அதிக பரிச்சய நியாயத்திற்கு இதுவே காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe