தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கனிமொழியிடம் திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வந்தது திமுக., இதனால், தானும் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்தார் கனிமொழி.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவரிடம் இன்று நேர்காணல் நடத்தப் பட்டுள்ளது. கட்சி ஜனநாயகத்தின் படி, விருப்ப மனு அளித்தவரிடம், கட்சித் தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தியுள்ளனர்.

அப்போது கனிமொழி மிகவும் சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருந்தார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த பலரும், இதற்காகத்தான் கனிமொழியே சிரிக்கிறார்; அதைப் பார்த்து உலகம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது என்கின்றனர்.

DMK leader Kanimozhi was interviewed by her brother and party president MK Stalin along with other senior leaders for the upcoming Lok Sabha elections. Kanimozhi had filed an application to contest from the Tuticorin Lok Sabha seat.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...