ஊடகவியலாளர்களே! நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள்… உங்கள் விசுவாசத்துக்குத் தகுதியானவை அல்ல!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை

ezhumalai venkatesan comment - 2026

வெளிப்படையாவே சொல்லிடறோம்.. பொதுவெளியில் தலைவர்களிடமும் மக்களிடமும் கேள்விகளை எழுப்பும் கணிசமான ஊடகவியலா ளர்களை பார்த்தால் பரிதாபம்தான் மேலோங்குகி றது..

தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியோட மனைநிலைக்கு ஏற்ப அப்படியே மைண்ட் செட் ஆகிவிடுகிறார்கள். அவர் என்னமோ, இவர்களை காலம் காலமாக காப்பாற்றுவார் என்ற அசட்டு நம்பிக்கை…

காட்டிய திசையில் எல்லாம் வெறிநாயாக பாய்ந்து முதலாளியின் எதிரிகளை கடித்து குதறிய விசுவாச மிக்க, ஆனால் ”சுயபுத்தி இல்லாத” ஆட்களை, நெருக்கடி என்றவுடன் ஈவு இரக்கமே பார்க்காமல் கழட்டிவிட்ட நிர்வாகங்கள் வரலாறு, இங்கே நிறையவே உண்டு..

நான்தான் சேனலே என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்களெல்லாம், கழட்டிவிடும் படலத்திற்கு பிறகு குந்துற எடமெல்லாம் சிந்துன மூக்கும் கையுமா என்று சொல்வார்களே அந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்..

காப்பாற்றுவான் என்று நீங்கள் நம்பிய ஆட்கள் கைவிட்ட நிலையில், திரும்பிப்பார்க்கும்போது நீங்களே எதிரிகளாக உருவாக்கிவிட்ட ஆயிரம் பேர் நேரம் பார்த்து சுளுக்கு எடுக்க காத்திருப்பார்கள்..

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

அதனால்தான் திரும்பத்திரும்ப சொல்கிறோம்.. யாருக்காகவும் அக்மார்க் முத்திரை குத்திக்கொண்டு உங்களது.சுயத்தை இழந்துவிடாதீர்கள்..

நிறுவனத்தை வைத்து பெயர் தேடிக்கொள்வது பெரிய விஷயமே அல்ல. எங்கே பணிபுரிந்தாலும் எல்லா தரப்பினரிடமும் தனக்கென தனி மரியா தையை ஏற்படுத்தி வைத்துக்கொள்வதுதான் காலாகாலத்திற்கும் நல்லது.

யாரையும், உள்நோக்கமில்லாமல் பொது நோக்கத் துடன் கேள்வி கேட்டு பழகுவதுதான் சாலச்சிறந் தது..கடுமையாக விமர்ச்சித்து எழுதலாம்.. ஆனால் அதில் ஒரு வரிகூட, மனசாட்சியை அடகு வைத்து விட்டு புளுகக்கூடாது..

என் எழுத்தில், எந்த இடத்தில் தப்பாக சொல்லியி ருக்கிறேன் என்று, கேட்கும் தைரியம் வேண்டும்..

எந்த பாகுபாடும் பார்க்காமல். நிகழ்வுகளின் அடிப்படையில் செய்தியை அணுகிவிட்டுப் போவதுதான், நல்லது..அதற்கு ஒரே முதலீடு மிகவும் மலிவானது..அதுதான் நேர்மை..

படம் சொல்லும் சேதி,, நம்ம பின்னாடி என்னென்னமோ இருக்கலாம்.. ஆனா நாமதான் முக்கியமான அம்சமா இருக்கணும்..

ஏழுமலை வேங்கடேசன் (மூத்த ஊடகவியலாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.