கமல்ஹாசனின் ‘மக்கள் கூட்டணி’ ஷூட்டிங் ஆரம்பம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்

kamal torch1 - 2026“பாஜகவை கண்டுபிடிக்க டார்ச்லைட் கொடுக்கப் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.

தமிழகத்தில் நோட்டாவால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பாஜகவை கண்டுபிடிக்க டார்ச்லைட் கொடுக்கப் பட்டுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார் கமல்.

பொருத்தமான சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

kamal torch2 - 2026

எங்கள் கூட்டணி பலமாக உள்ளது; நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும்,  மநீம கட்சிக்கான நேர்காணல் நாளை முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது  என்றும் கூறினார் கமல்ஹாசன்.

kamal torche - 2026

இன்று தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 39 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.