போர்களை நாம் விரும்புவதில்லை! ஆம்… விரும்புவதில்லை!

Published:

kashmiri pandits - 2026

நான் …

அமைதியை விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
அமைதியையே விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
இந்த அமைதி மார்க்கம்…

இந்திய நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மைதான்!

ஆனால்…
என் மீதுதானே
எத்தனை போர்கள் திணிக்கப்பட்டன?!

பாலைவன மண்ணில் இருந்து
எத்தனை எத்தனை ‘புனிதப் போர்’கள்..
என் மீது…?!

என்னுடன் தோளுக்குத் தோழனாய் நின்றவன்
இன்று கத்தியைத் தூக்கி
என் கழுத்துக்குக் குறி வைக்கிறான்..
காரணம்
நான் அவனை விட இரண்டு இஞ்ச்
உயரமானவனாம்!
நானும் அவனும் ஒன்றாய் விளையாடிய போது
இந்த உயரம் எல்லாம் எங்களுக்குள் தெரியவில்லை!

ஏசு என்னும் ஓர் அப்பாவி மனிதனை
கொலைக்கருவியான சிலுவையில் அறைந்து கொன்றவன்
இன்னொரு புனிதப் போர் நடத்தினான்…
அதுவும் என் மீதே!

ரத்தம் சொட்டச் சொட்ட
அந்த அப்பாவியை சிலுவையில் சுமக்கச் செய்தவன்…
ஏதோ நமக்காக அந்த அப்பாவி மனிதன்
ரத்தம் சிந்தியதாய்க் கதை விட்டான்…

அந்தக் கொலைகாரன்
வெள்ளை ஆடை உடுத்தி வந்து
புன்சிரிப்புடன் என் கழுத்தை அறுக்கிறான்…

என் கழுத்துக்கு நேற்றுவரை மருந்து தடவி விட்ட
அந்த இரண்டு இஞ்சு உயரம் குறைவான தோழன்
இன்று அவனால் என் கழுத்தைக் குறி பார்க்கிறான்…

போர்களை நாங்கள் என்றைக்குமே விரும்புவதில்லை…
புனிதப் போர்களையும் தான்!

– செந்தமிழன் சீராமன்

Related articles

Recent articles

spot_img