October 26, 2021, 2:26 am
More

  ARTICLE - SECTIONS

  பொள்ளாச்சி பிசாசுகளும் பணகுடி கிறிஸ்தவ ஆசிரியரும்!

  girlmolest - 1

  பொள்ளாச்சி சம்பவத்திற்காக பொங்கும் போராளிகளே?? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா?

  இந்த சம்பவம் … போன வருடம் நெல்லை மாவட்டம் பணகுடி என்ற ஊரில் உள்ள கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் குருவாக பார்க்கும் ஆசிரியரால் பள்ளியில் பயிலும் வயதுக்கு வந்த பல மாணவிகளை பள்ளியில் வைத்தே பலாத்காரம் செய்து வந்துள்ளான் ஒரு காமமிருகம்..

  மேலும் அதை தனது செல்போனில் படம்பிடித்து மிரட்டி மீண்டும் மீண்டும்  மாணவிகளை தன் காம இச்சையை தீர்த்த சம்பவம் அரங்கேறியது… மேலும் அந்த ஆசிரியரின் அலைபேசி பழுதுக்காக அங்குள்ள ஒரு இஸ்லாமியரின் சர்வீஸ் சென்டரில் கொடுக்க அந்த நபர் இவனின் அந்தரங்க வீடியோவை எடுத்து அந்த ஆசிரியரை மிரட்டி பலமுறை பணம் பிடுங்கியதோடு மட்டுமில்லாமல்…

  மாணவிகளையும் சப்ளை செய்யச் சொல்ல அதனால் நடந்த கைகலப்பில் காவல் நிலையத்தில் செல்போனில் இருந்த ரகசியம் வெளியே வந்தது…!

  பாதிக்கப் பட்ட மாணவிகள் அனைவருமே இந்துக்கள் என்ற விவகாரமும் வெளிவந்தது..!

  teacher antonysamy - 2

  இந்த விவகாரத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் கையில் எடுத்ததும் பிரச்னையின்
  தீவிரத்தை வெளி வராமல் தடுக்க பணகுடி காவல்நிலையத்தில் அப்போது அங்கு ஆய்வாளராக பணியாற்றிய நபரை விலைக்கு வாங்கியது பள்ளிநிர்வாகம்…!
  விலைபோனார் ஆய்வாளர் ஏனென்றால் அவரும் கிருத்துவர்..!

  கொடுரம் பின்புதான் அரங்கேறியது! எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஆய்வாளருக்கு ஏற்பட்டது…!

  உடனே வழக்கு பதிந்தார் அது எப்படிபட்ட வழக்கு பதிவு என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்ஆற்றில் குளித்த பெண்களை தனது போனில் படம்பிடித்ததாகவும் அதனால்தான் கைது செய்யபட்டதாகவும் பத்திரிகைசெய்திகளில் வந்தது..!

  எனக்கே நன்றாக தெரியும் இது ஏமாற்றுவேலை என்று… ஏனென்றால் எந்த ஆற்றில் பெண்கள் குளித்ததாக வழக்கு பதியபட்டதோ அந்த ஆற்றில் தண்ணீர் வந்தே ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது..!

  எப்படி தண்ணீரே வராத ஆற்றில் பெண்கள் குளித்திருப்பார்கள்? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்… !

  இப்போது நான் கூறுவதுகூட பொய் என்றுகூட வாதிடுவார்கள்… ஏனென்றால் நானும் அதே ஊரின் அருகே உள்ள ஒருகிராமத்தை சார்ந்தவன்தான்… ஆனால் இன்று பொள்ளாச்சி பெண்களுக்கு ரோட்டில் இறங்கி பொங்கும் இந்த திடீர் போராளிகள் அன்று பள்ளிமாணவிகள் கற்பழிக்கபட்டபோது எங்கே சென்றிருந்தார்கள்?

  அப்போது இந்த மாதர் சங்கங்களின் வாயில் என்ன வைத்திருந்தார்கள்? ஏன் நெல்லை சட்டகல்லூரி மாணவர்கள் அன்று போராடவில்லை? எதிர்கட்சிகள் ஏன் அன்று இதற்காக குரல் கொடுக்கவில்லை?

  நக்கீரன் கோபாலோ? அன்றும் எதிர்கட்சிதலைவராக இருந்த ஸ்டாலினோ ?
  கண்டிக்க வில்லை அறிக்கை விடவில்லை சி.பி.ஐ விசாரணை கேட்கவில்லை
  ஏன்?

  அதற்காக பொள்ளாச்சி பெண்களுக்கு நடந்த அநீதியை நான் ஆதரிக்கவில்லை
  ஆதரிக்கவும் மாட்டேன்….. தவறு யார் செய்தாலும் தவறுதான் குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும் அதில் எனக்கு எள்முனையளவும் மாற்றுகருத்தில்லை…

  பொள்ளாச்சி சம்பவமாவது அந்த அந்த பெண்கள் குற்றவாளிகளுடன் நட்பில் இருந்து பின் பாதிக்கப் பட்டவர்கள்… இந்த குற்றத்தில் பாதிபங்கு அவர்களிடமும் உண்டு என்பது யாராலும் மறுக்கமுடியுமா?

  இவர்களை குற்றவாளிகள் வீட்டில் புகுந்து கடத்தவோ கற்பழிக்கவோ இல்லை… அவர்கள் விருப்பத்தின்படியேதான் குற்றவாளிகளை தனியே சந்திக்க சென்று வாழ்வு இழந்துள்ளனர்… பொள்ளாச்சி சம்பவத்தில் கல்லூரியில் படிப்பவர்கள்
  திருமணமாணவர்கள் என்றுதான் தகவல் வருகிறது…

  ஆனால் நெல்லை பணகுடி சம்பவமோ அப்படியில்லை பாதிக்கபட்ட அனைவருமே
  உலகமறியாத பள்ளி சிறுமிகள் மாணவிகள்….

  இரண்டு சம்பவத்திற்கும் வித்யாசம் உண்டு… ஏன் யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை என்பதையும் குறிப்பிடுகிறேன்… சம்பந்தபட்ட நபரும் பள்ளியும்
  கிருத்துவ மிஷனரிகள்…!

  ஆய்வாளரும் கிருத்துவர். !  கண்டிக்கவேண்டிய முக்கிய  எதிர்கட்சி தலைவரோ கிருத்துவ மதத்தினர் போடும் எச்சை ஓட்டுக்காகவும்,  காலம் காலமாக  இந்துக்களையும் இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் எந்த அநீதி செய்தாலும்
  வாய்திறக்காத திருட்டு திராவிடத்தை ஆதரிக்கும் நபர்…

  ஊடகங்களோ இன்றுபோல் அன்று செய்திகளை வெளியிடவே இல்லை காரணம்?

  மதமாற்ற கும்பலிடம் வாங்கி நக்கி வயிறு வளர்க்கும் போக்கு வேதனையான உண்மை
  தமிழகத்தில் #வேசிஊடகங்களே உள்ளன…. பொள்ளாச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு
  வந்ததுக்கு காரணம் குற்றவாளிகள் அனைவரும் பிறப்பால் இந்துக்கள்… அவ்வளவே…

  ஒருவேளை குற்றவாளிகளின் பெயர்கள் இர்பான்’தாவூத், என்றோ? பீட்டர் ,ஆரோக்கியசாமி என்றோ? இருந்திருந்தால்… எந்த கட்சிகளும் அமைப்பு களும் மாதர்சங்கங்களும் திடீர்போராளிகளும் ஊடகமும் பத்தோடு பதினொன்று என கடந்து போயிருக்கும்… அதிலும் திமுக தலைவர் தேர்தல் நேரத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குக்காக வாயில் வாழைபழத்தை வைத்துகொண்டே சுற்றிவந்திருப்பார் தேர்தல் முடியும்வரை….

  ஒன்றுமட்டுமே விளங்குகிறது குற்றம் நடந்த மாநிலத்தை பாஜக ஆண்டாலோ அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் ஆண்டாலோ …

  இல்லை சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்துவாக இருந்தால் மட்டுமே தமிழகத்தில் ஜனநாயகமும் கருத்துரிமையும், விவாதங்களும் போராட்டங்களும் நடந்தேறும்… இல்லை தேர்தல்நேரமாக இருந்திருக்கவேண்டும்….

  மனம் ஏனோ மறுக்கிறது இவர்களுக்கு.. பணகுடியில் பாதிக்கப்பட்ட மாணவிகளை தமிழச்சிகளாகவும் பெண்களாகவும் சகோதரிகளாகவும் பார்க்க…

  ஆனால் எந்த கட்சியும் கண்டிக்கவும் இல்லை தண்டிக்கவும் இல்லை ஏனோ.???
  குற்றவாளியும் பள்ளி நிர்வாகமும் ஜாலியாக தான் சுத்துறானுங்க!…

  மனகுமுறலை கொட்டிவிட்ட நிம்மதி சற்றே…. நீதி கிடைக்க வாய்ப்பில்லை
  என்ற கோபம் இமயமளவு…. என்றும் தேசபணி தெய்வீக பணியில்

  – செந்தமிழ் சு.இராமகிருஷ்ணன்

  தொடர்புடைய செய்திகள்:

  ஆசிரியர்- பெயர் அந்தோணிசாமி; பணி- மொபைலில் மாணவிகளை நிர்வாணப் படம் பிடித்து அரசு சம்பளத்தில் பாலியல் பாடம் நடத்துவது!

  சிறுபான்மை எனும் கூட்டுக்குள் பதுங்கும் விஷ ஜந்துக்கள்! கையாலாகாத அரசு! கைத்தாங்கல் அதிகாரிகள்!

  ஆசிரியர் அந்தோணிசாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-