October 24, 2021, 9:44 pm
More

  ARTICLE - SECTIONS

  பயங்கரவாதிகளின் புகலிடமான ராமநாதபுரம் கடற்கரை! தேவை என்.ஐ.ஏ., அதிரடி!

  ramnad - 1

  ராமநாதபுரத்தில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மேல் கொலை முயற்சி நடந்திருக்கின்றது! ஆனால் அதை எல்லாம் எல்லா பத்திரிகைகளும் அமுக்கியது; அரசும் எதிர்கட்சியும் அமுக்கியது! ஏனென்றால் சிறுபான்மை வாக்கு சிதைந்துவிடுமாம்!

  இரு நாட்களாக வந்த செய்திகள் அவர்மேல் தாக்குதல் நடந்ததை சொல்லிகொண்டே இருந்தன, இருமுறை நடந்தது! தாக்குதலின் பிண்ணணியில் சில இஸ்லாமிய இயக்கம், அமமமுக அவர்கள் பின்னணியில் திமுக என கரங்கள் நீண்டன‌. இந்நிலையில்தான் கொலை முயற்சி நடந்திருக்கின்றது?

  ஒரு வேட்பாளரின் உயிருக்கு பாதுகாப்பில்லை எனும் அளவில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கின்றது, இது நாடா இல்லை கொலைகாரர் வாழும் காடா? நாகேந்திரனுக்கும் அங்கு உள்ளோருக்கும் என்ன சொந்த பகையா? நிச்சயம் இல்லை!

  மாறாக பாஜக வேட்பாளரை அடிப்போம் என அடித்திருக்கின்றார்கள் அயோக்கியர்கள்! ஏன் பாஜக மேல் அவ்வளவு வெறுப்பு? விசாரித்தால் தகிக்க வைக்கும் விஷயங்கள் வருகின்றன‌.

  ராமநாதபுரம் கடற்கரை புனிதமான விவேகானந்தர் பெயரை தாங்கி நின்றதெல்லாம் அக்காலம் என்று சேதுபதி மன்னனின் ஆட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிற்றோ அன்றிலிருந்து அது கடத்தல் கடற்கரை! அவர்களை யாரும் தொடவும் முடியாது, தொட்டுவிட்டு இருக்கவும் முடியாது!

  இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை இம்சிப்பதில் 90% இதுதான்! நாட்டுக்கு மிக ஆபத்தான இடமாக இது 1960களிலே மாறியது. நிலைமை எல்லை மீறி சென்றது , அவர்களை தொட்டால் சிறுபான்மை என கொந்தளித்தார்கள் , நிரம்ப யோசித்த இந்தியா கச்சத்தீவினை இலங்கைக்கே கொடுத்து நிலைமையினை இலங்கை பக்கம் தள்ளியது!

  அப்பாவி மீனவர்கள் நடுவே கடத்தல்காரர்களும் தேசவிரோதிகளும் நடமாட துப்பாக்கி சூட்டில் ஏகபட்ட பலி, இடையில் புலிகள் புகுந்தது வேறுகதை!

  அதாவது அந்த கடற்பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை முழுக்க தேசவிரோத சக்திகள். மோடி அரசு வந்தபின் அங்கு கடும் கவனம், பாதுகாப்புகள் இறுக்கப் படுகின்றன, தனுஷ்கோடி சீரமைக்கபடுகின்றது. இப்பொழுதெல்லாம் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கண்கள் பதிந்துவிட்ட பகுதி அது!

  அந்த இடத்தில் பாஜக எம்பி வந்துவிட்டால் என்னாகும்? அதனால்தான் கொல்ல துணிந்திருக்கின்றார்கள்! நாகேந்திரன் செய்த புண்ணியம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது!

  நயினார் நாகேந்திரனை ஏன் கொல்லத் துடிக்க வேண்டும்? மற்ற கட்சிகளைப் போல அல்ல பாஜக! அதன் தன்மை வேறு, பாஜக எம்பி வரும் பட்சத்தில் அவர்கள் அஸ்திவாரமே ஆடிவிடும்! இதனால்தான் பெரும் மிரட்டலை உலகிற்கு சொல்லும் விதமாக அவரை கொல்ல முயன்றிருக்கின்றார்கள்! இன்னொரு வேட்பாளர் அப்பக்கம் வர நினைக்கக் கூடாது என்ற அளவில் அவர்கள் திட்டம் இருந்திருக்கின்றது!

  இதில் உள்ளூர் சில்லுண்டிகள் மட்டுமல்ல ஒழுங்காக விசாரித்தால் சர்வதேச பாதாள கும்பல்கள் வரை தொடர்பு நீளும் என்கின்றார்கள்! ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, தெய்வம் காத்திருக்கின்றது ஆன்மீக மண் என்பது அதுதான்!

  நடந்த சம்பவம் மிக கொடுமையானது, தேசமே திகைக்கின்றது! மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது, தேர்தல் கமிஷன் திகைக்கின்றது, துணை ராணுவம் இனி வரலாம்!

  எனினும் உரிய விசாரணை நடத்தி இந்த தேசவிரோத கும்பலை ஒடுக்கி தண்டனை வழங்க வேண்டியது அரசின் கடமை! மத்திய அரசு அதை செய்யட்டும்~

  கட்சி மேல் ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் அதற்காக பாஜக வேட்பாளரை கொல்வோம் என்பது எப்படி நியாயம்? ராமநாதபுரம் என்ன பாகிஸ்தானிலா இருக் கின்றது இல்லை அப்படி நினைத்து கொள்கின்றார்களா? மிகப் பெரும் தேசவிரோத கும்பல் ஒன்றை தன் ரத்தத்தை சிந்தி அடையாளம் காட்டியிருகின்றார் நாகேந்திரன்!

  நல்ல இந்தியன் அதைத்தான் செய்வான் அதை செய்திருகின்றார்! அந்த தேசவிரோதிகளுக்கு திமுக அமமுகவின் ஆதவும் இருக்கின்றது என்பது இன்னொரு செய்தி! நாகேந்திரனின் ஒவ்வொரு சொட்டு ரத்தததிற்கும் நல்ல இந்திய தேசிய உணர்வுள்ள மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள்.

  மற்றபடி எல்லா அயோக்கியர்களும் எப்படி ஒழிந்தார்களோ அப்படி இந்த படுபாதக செயலை செய்தவர்கள் நாசமாய் போவார்கள்! இவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும், இதற்கு மேல் என்ன முடியும்?

  நாகேந்திரன் மீது விழுந்த அடி, இங்கு இந்திய இறையாண்மையினை ஏற்றுக்கொள்ள மாட்டோம்; இந்திய சட்டங்களுக்கு வணங்க மாட்டோம் எனச்சொல்பவர்களால் கொடுக்கப்பட்ட இந்திய தேசியத்தின் மீது விழுந்த அடி!

  இந்திரா மேலும் ராஜிவ் மேலும் விழுந்த அந்த அடி.. இந்திய சட்டம் இங்கு செல்லாது இது தனிராஜ்யம் என சொல்லி அடித்த அடி! நடக்கும் கொடூரத்தை மக்கள் பார்த்துகொண்டே இருக்கின்றனர்.

  நல்ல தீர்ப்பை மக்கள் வழங்கட்டும், அயோக்கிய தேசவிரோத கும்பல் ஒழியட்டும் அந்த ஆன்மீக மண் தன் பெருமையினை மீட்டெடுக்கட்டும்!

  பசும்பொன் தேவரும், அப்துல் கலாமும் இன்னும் பலரையும் மிகச் சிறந்த தேசிய வாதிகளாக உருவாக்கிய‌ புண்ணிய பூமி அது!

  எந்த அப்துல் கலாமை இஸ்லாமியர்களின் அடையாளமாக இந்த தேசம் நினைத்ததோ, அந்த இஸ்லாமிய சமூகத்துக்கு துரோகம் இழைக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய வெறியர்களான எஸ்டிபிஐ., போன்ற அமைப்புகளும்… எந்த பசும்பொன் தேவரை இந்த தேசம் தேவர் சமூகத்தின் அடையாளமாக தெய்வீகமும் தேசியமும் கொண்டு காண்கிறதோ அந்த சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை அரசியல் காரணங்களுக்காக தன் பக்கம் இழுத்து வைத்திருக்கும் அமமுக., டிடிவி தினகரனும்… இந்த நாட்டின் மக்களால் புறக்கணிக்கப் பட வேண்டியவர்களே என்பதை ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன இத்தகைய காட்டுமிராண்டித் தாக்குதல்கள்!

  இன்னும், ராமநாதபுரம், காயல்பட்டினம், நெல்லை மேலப்பாளையம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, ஆம்பூர், வாணியம்பாடி, கோயம்புத்தூர் – இப்படி சில இடங்களில் என்கவுண்டர் செய்யவேண்டிய வேலை என்.ஐ.ஏ.,வுக்கு இருக்கிறது. அதுவே உள்நாட்டு பாதுகாப்பிற்கு சிறந்தது. எல்லை காவல் வேண்டும். அதைவிட உள்நாட்டிலும் தலையெடுக்க வேண்டும்…. என்ற குரல்கள் இப்போது மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-