September 28, 2021, 2:07 pm
More

  ARTICLE - SECTIONS

  இஸ்லாமிய பயங்கரவாதம்! அன்று விடுதலைப் புலிகளுடன் தமிழர்களைக் கொன்றது… இன்று கிறிஸ்துவர்கள்!

  விடுதலைப் புலிகளையும் தமிழ் ஹிந்துக்களையும் அழிக்க உதவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்பாளர்கள் இப்போது இலங்கையில் கிறிஸ்துவத்தின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளதாகக் கூறுகின்றனர் இலங்கைத் தமிழர்கள்!

  Srilankabombblast - 1

  இலங்கையில் வளர்ந்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வெளிப்பாடு, அன்று விடுதலைப் புலிகளுடன் சேர்த்து லட்சக் கணக்கான ஹிந்து தமிழர்களைக் கொன்றது! இன்று போட்டியாளரான கிறிஸ்துவர்களைக் குறிவைத்துள்ளது.

  ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட உயர் தர ஹோட்டல்களிலும் சர்ச்களிலும் பலரும் குழுமியிருக்க, குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கான நாளை பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 35 வெளிநாட்டவர்கள் உட்பட 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

  கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தேசிய மருத்துவமனையின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

  கட்டுவாபிடியாவில் 93 பேர் கொல்லப்பட்டதாகவும், மட்டக்களப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

  தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களும், ஜப்பானியர்களும் இறந்தவர்களுள் பிரிட்டிஷ், டச்சு மற்றும் அமெரிக்க குடிமக்களும் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இந்தத் தாக்குதல்களை “கோழைத்தனமான” தாக்குதல் என்று கண்டனம் செய்துள்ளார். மேலும், அரசாங்கம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக பணி செய்யும் என்று கூறியுள்ளார்.

  bombblastsrilanka - 2சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் செய்தித் தளங்களில் பகிரப்பட்ட படங்கள், ஞாயிறு காலை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சர்ச்சுகளில் நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளின் கோரத்தை வெளிப்படுத்தின.

  சிலுவையில் அறையப் பட்டு மரணித்த ஏசு, ஞாயிறு மீண்டும் உயிர்ப்பித்து வந்த நாளைக் கொண்டாடும் ஈஸ்டர் தினத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்து இறை நம்பிக்கையாளர்களின் உயிரைப் பறித்திருக்கிறார்கள் இந்த பயங்கரவாதிகள்! இறை வணக்கத்திற்காக வந்த அந்த நம்பிக்கையாளர்களின் உடல் நாடி நரம்புகளில் துளைத்த வெடிகுண்டுகளின் சிதறல்களால் வெடித்துச் சிதறிய ரத்தத்தின் தாரைகள், சர்ச்சின் மேற்கூரையிலும் சுவர்களிலும் சிதறிக் கிடந்தன. சர்ச்சின் மேற்கூரை பெருமளவு பெயர்ந்து கீழே வெடித்துச் சிதறியிருந்தன. சர்ச்சின் தரைத் தலத்தில் பாவப் பட்டிருந்த டைல்ஸ் கற்கள் வெடிகுண்டுகளின் வீரியம் தாங்காமல் பாளம் பாளமாய் வெடித்துக் கிளம்பியிருந்தன.

  காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்களை, உள்ளூர் மருத்துவமனைகளில் வரிசை வரிசையாய்க் கொண்டு போய் கிடத்தினர் அதிகாரிகள். இந்தக் குண்டுவீச்சின் பாதிப்புத் தன்மை உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த குண்டு வீச்சை நாங்கள்தான் நிகழ்த்தினோம் என்று உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

  srilanka blast1 - 3ஆனால் AFP ஆல் முன்வைக்கப்பட்ட ஆவணங்களில் 10 நாட்களுக்கு முன்னர் உயர் அதிகாரிகளுக்கு புலனாய்வு ரகசிய எச்சரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டதாக ஸ்ரீலங்கா காவல் துறைத் தலைவர் புஜத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மத அடிப்படைவாத தற்கொலைப்படையினர் முக்கிய தேவாலயங்களை குறிவைத்து தாக்க திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை வந்துள்ளது.

  கொழும்பில் உள்ள இந்திய தூதரம் மற்றும் முக்கிய சர்ச்களை இலக்காகக் கொண்ட தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு NTJ (நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்) திட்டமிட்டுள்ளது என ஒரு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  கடந்த வருடம் இலங்கையில் புத்தமதம் தொடர்புடைய சிலைகளை அடித்து நொறுக்குவதற்காக தொடங்கப்பட்ட ஸ்ரீலங்காவின் ஒரு பயங்கரவாத முஸ்லிம் குழுவாக நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அறியப் பட்டது.

  இதன் முதல் குண்டுவெடிப்பு, தலைநகர் கொழும்பில் நன்கு அறியப்பட்ட கத்தோலிக்க தேவாலயமான செண்ட் ஆண்டனி சர்ச்சில் நிகழ்ந்துள்ளது.

  இரண்டாவது வெடிகுண்டு, கொழும்புவின் வடக்குப் பகுதியில் உள்ள நெகோம்போவில், செண்ட் செபஸ்டியன் சர்ச்சில் நிகழ்ந்துள்ளது.

  blast in srilanka - 4“எங்கள் சர்ச்சில் ஒரு குண்டு தாக்குதல், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் உடனே வந்து உதவி செய்யுங்கள் என்று, அந்த சர்ச்சின் பேஸ்புக் பக்கம் ஆங்கிலத்தில் ஒரு பதவினைச் செய்தது.

  மட்டக்களப்பு நகரில் உள்ள சர்ச்சில் மூன்றாவது குண்டுவெடிப்பும் தலைநகரில் உள்ள மூன்று உயர் தர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

  தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன இந்த குண்டுவீச்சினால் அதிர்ச்சியடைந்து, அமைதி காக்குமாறு உரை நிகழ்த்தினார்.

  உடனடியாக டிவிட்டரில் விக்கிரமசிங்க பதிவிட்டார்… “இன்று நம் மக்கள் மீது கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தப் பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… என்றார்.

  “இந்த சோகமயமான நேரத்தில் இலங்கை மக்கள் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்க நான் அழைப்பு விடுகிறேன். சரிபார்க்கப்படாத வெற்று வதந்திகளை, ஊகங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது… என்றார்.

  இந்தத் தாக்குதலில் இலக்கான ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்கள்! இதில் கொழும்பிலுள்ள பிரதம மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சின்னாமன் கிராண்ட் ஹோட்டல் முக்கியமானது.

  சங்கரி-லா ஹோட்டலில், ஒரு AFP புகைப்படக்காரர் இரண்டாவது மாடியில் உணவகத்தில் பெருஞ் சேதம் ஏற்பட்டதைக் கண்டார், ஜன்னல்கள் வெடித்துச் சிதறியிருந்தன. மின் கம்பிகள் அறுந்து தொங்கின.blastin srilanka churches - 5

  இந்நிலையில், “அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. மீட்புச் செயல்கள் நடந்து வருகின்றன “என குறிப்பிட்டார், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா. அவர் தனது டிவிட்டரில் இவ்வாறு பதிவு செய்தார்.

  தாக்குதல்களுக்கு இலக்கான ஹோட்டல்களில் இருந்ததாகவும், சர்ச்சுக்கு சென்று பார்வையிட்டதாகவும், அங்கே காட்சிகள் விவரிக்க இயலாத அளவுக்கு பயங்கரமாக இருந்தன என்றும் குறிப்பிட்டார்.

  srilanka suicide - 6

  “நான் பலரது உடல் பாகங்கள் ரத்தக் கறைகளுடன் அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்ததைக் கண்டேன்.. அவர்களில் சிலர் வெளிநாட்டவர்கள், பலர் நம் நாட்டவர்… என்று ட்வீட் செய்தார்.

  மேலும், தயவு செய்து அமைதியாகவும் வீட்டுக்கு உள்ளேயும் இருங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

  இந்நிலையில், கொழும்பிலுள்ள வேற்று நாட்டு தூதரகங்கள் தங்களது நாட்டு மக்களை பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியிருக்குமாறு எச்சரிக்கை செய்தன!
  இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, நான்கு மணி நேரங்களுக்கு முன்னரே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு பயணியருக்கு ஸ்ரீலங்கா விமான நிறுவனம் தகவல் அனுப்பியது.

  bombblast srilanka church - 7பௌத்த மத பெரும்பான்மை கொண்ட ஸ்ரீலங்காவில் 6 சதவீதத்தினர் மட்டுமே கத்தோலிக்கர்கள். ஆனால் இலங்கையின் இந்தக் கிறிஸ்துவ மதமானது பெரும்பான்மை சிங்களவர்களையும், சிறுபான்மை தமிழர்களையும் மதம் மாற்றி, ஒரு ஒருங்கிணைத்த மதமாகத் திகழ்கிறது.

  அதே நேரம், கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் போரின் போது, இலங்கையைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் கொல்லப் பட்டதாக தகவல் வெளியானது. அதுவரையிலும், இலங்கையில் வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கர வாதக் குழுக்களின் பங்கு அல்லது வளர்ச்சி இருந்ததாக இலங்கையில் பதிவுகள் இல்லை.bombblastsrilanka2 - 8

  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், இலங்கை போலீஸார் வனவிலங்கு சரணாலயம் பகுதியில், நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் புதிதாக உருவாக்கப் பட்ட அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள், டெடனேட்டர்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். இது அப்போதே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதை அடுத்து நாடு முழுவதும் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

  srilanka churcharmy - 9நாட்டில் இன்று சில இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

  குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட அனைவரது இறுதிச் சடங்குகளும் அரசு செலவில் நடத்தப்படும் எனவும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலைமையில் அனைவரும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

  முன்னதாக விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்! விடுதலைப் புலிகளையும் தமிழ் ஹிந்துக்களையும் அழிக்க உதவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்பாளர்கள் இப்போது இலங்கையில் கிறிஸ்துவத்தின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளதாகக் கூறுகின்றனர் இலங்கைத் தமிழர்கள்!

  2 COMMENTS

  1. ஐயா.. சேர்த்து என்பதற்கும் சேர்ந்து என்பதற்கும் வேறுபாடு இருக்குங்க. விடுதலைப்புலிகளையும் சேர்த்து தமிழர்களைக் கொல்ல சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்து கொன்று குவிக்க காரணமாக இருந்தது இலங்கை முஸ்லிம்கள் என்று இலங்கையின் ராணுவ தளபதி வெளிப்படையாக நன்றி தெரிவித்தாரே…

  2. நீங்கள் முஸ்லிம்கள் புலிகளுடன் சேர்ந்து தமிழ்மக்களை கொன்றார்கள் என்று சொன்னீர்கள் அனால் அது தவறு. அவர்கள் இலங்கை படையினருடன் சேர்ந்து தமிழ் மக்களை கொன்றார்கள். அதை சரி செய்யுங்கள் இல்லை அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்

   nanri

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-