நியூஸி., மசூதி துப்பாக்கிச் சூடும்; ஸ்ரீலங்கா சர்ச்களில் குண்டுவெடிப்புகளும்!

உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bombblastsrilanka - 2026

சென்ற மாதம் நியூஸிலாந்து மசூதியில் கிறிஸ்துவர்கள் இருவர் தாக்கி 30 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு மாதம் கடந்த நிலையில், இலங்கையில் சர்ச்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப் படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 16ம் நாள், நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்வுட் புறநகர் பகுதி மசூதியிலும் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

newzealand killed - 2026

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் சாட்டப்பட்டார் பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர்! இந்தத் துப்பாக்கிச் சூடை பேஸ்புக்கில் லைவ்வாக போட்டுக் காட்டியபடியே சென்றார். இதற்கு, நியூசிலாந்தில் பரவி வரும் இஸ்லாமிய மயமாக்கம் மற்றும் மசூதிப் பரவலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தகைய தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். #NZMosqueAttack #AustralianExtremist

இந்நிலையில், இன்று ஈஸ்டர் பண்டிகை தினத்தில், ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கூடியிருக்கும் நேரத்தில், தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளது, நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பயங்கரவாத அமைப்பு என்று சந்தேகிக்கப் படுகிறது.

சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளதால், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், கொழும்புவில் சர்ச்களைக் குறிவைத்து நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு போப் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.