spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வன்முறைக்கு உள்ளாகும் அமைதி விரும்பிகள்… ஹிந்துக்கள்!

வன்முறைக்கு உள்ளாகும் அமைதி விரும்பிகள்… ஹிந்துக்கள்!

- Advertisement -
cow worship
cow worship

தெலுங்கில்: டாக்டர். உலிமிரி வேங்கட சோமயாஜுலு
தமிழில்: ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிகை 2020)

இந்தியாவின் போலி மேதாவிகளுக்கும், பிற மதத்தவருக்கு விலைபோன தர்ம துரோகிகளுக்கும் ஹிந்துக்களின் அமைதி விரும்பும் குணம் தென்படுவதில்லை.

பல நூறு ஆண்டுகால பிற மதத்தவரின் அடக்குமுறைக்கு பலியான ஹிந்துக்களின் மீது ஆட்சேபனைக்குரிய விமர்சனங்கள் செய்வது அண்மைக் காலமாக ஒரு தொற்று நோய் போல் பரவி வருகிறது.

இதற்குக் காரணங்கள்: நம் மறதி, அலட்சியம், பற்றின்மை, ஒற்றுமையின்மை, புரிதலின்மை.

இனிமேலாவது ஒவ்வொரு ஹிந்துவும் ஹிந்து மத விரோதச் செயல்களையும் விமர்சனங்களையும் எதிர்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் வரலாற்றுப் பக்கங்களில் ஏறாத, இந்துக்களின் மீது பிற மதத்தவரின் அடக்கு முறை பற்றியும் அவர்கள் ஹிந்துக்களுக்கு ஏற்படுத்திய நஷ்டம் பற்றியும் தெரிந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்வோம்…

மனிதாபிமானிகளாக கூறிக் கொண்டு வலம் வருபவர்கள், பிற மதத்தவரின் வன்முறை குறித்து வாய் திறப்பதில்லையே, ஏன்? உலகில் மிக அதிகமாக அமைதியை விரும்பும் நாடு நம் புண்ணிய பாரத தேசம்.

என்றுமே ஹிம்சையில் ஈடுபடாத, ஆக்கிரமிப்புகளைச் செய்யாத, பிற மதத்தவரை மத மாற்றத்துக்கு உட்படுத்தாத, மதப் பரப்புதலுக்கு முயற்சிக்காக தர்மம்… நம் சனாதன இந்து தர்மம். உண்மையில் நம்முடையது தர்மம்!! மதம் அல்ல.

முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகள்: இஸ்லாம் மதத்தைத் தொடங்கி வைத்த மஹம்மது, பொ.ஆ. 632 ல் இறந்த பின், அவருடைய தொண்டர்கள் உலகில் தம் மதத்தை பரப்புவதற்காகவும் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆக்கிரமிப்புகளைத் தொடங்கினார்கள்.

இஸ்லாமிய உலகை தோற்றுவிப்பதும் ஷரியத் சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட ஆட்சியும் ஒவ்வொரு முஸ்லிமுடைய கனவு. ஒவ்வொரு பயங்கரவாதியும் ‘ஜிஹாத்’ (Holy war) செய்வது இதற்காகத்தான்.

2001- 2019 இடைப்பட்ட காலத்தில் இஸ்லாம் பயங்கரவாதிகள் 35 ஆயிரம் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். 10 லட்சம் பேரைக் கொன்று குவித்தார்கள். பொ.ஆ. 610 முதல் 2006 வரை 27 கோடி பிற மதத்தவரை கொன்று குவித்தார்கள்.

பொ.ஆ. 624ல் மதினா மீது தொடங்கிய தாக்குதல் அரேபியா, சிரியா, ஆர்மேனியா, பெர்ஷியா, ஜெரூஸலம், எகிப்து, ஆப்கானிஸ்தான், ஜார்ஜியா, வட ஆப்பிரிக்கா, மத்திய துருக்கி, சிசிலி, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகிஸ்தான், சூடான், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜிப்ரால்டர், பாலி, தெற்கு இத்தாலி, அல்பேனியா, போஸ்னியா, தெற்கு பிலிப்பைன்ஸ், வெனிஸ், ஹங்கேரி, இந்தோனேசியா, போலண்ட், கிரீஸ், ஆஸ்ட்ரியா, லெபனான், இஸ்ரேல், இந்தியா முதலிய நாடுகளின் மீது தொடர்ந்து, பிற மதத்தவர்களைக் கொன்று குவித்தும் மதம் மாற்றியும் கொள்ளையடித்தும் அழிவுக்கு வழி வகுத்தார்கள்.

பிற மதத்தவரின் இரத்தத்தில் நனைந்த கத்திகளின் உதவியால் இஸ்லாம் மதம் பரப்பப்பட்டது.

cow worship in india
cow worship in india

மூர்க்கர்களின் முற்றுகை: இனி, பாரதி தேசத்தின் விஷயத்திற்கு வந்தால்…

பொ.ஆ.1000ல் முகமது கஜினியோடு பாலைவன மத மூர்க்கர்களின் அடக்குமுறை தொடங்கியது. நாதிர்ஷா டில்லியில் மட்டுமே கொன்று குவித்த ஹிந்துக்களின் எலும்புக்கூடுகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன என்று வரலாறு தெரிவிக்கிறது.

பொ.ஆ.1527 ல் ராணா சிங்கை தோற்கடித்து பாபர், ஹிந்துக்களின் எலும்புக்கூடுகளால் ஆன ஸ்தூபத்தை நிலை நிறுத்தினான். சந்தேரி கோட்டையை வசப்படுத்திய பின்பும் மீண்டும் அதே போல் கொன்று குவித்தான்.

பொ.ஆ.1568ல் சித்தோட்கட்டை வசப்படுத்திக் கொண்டு 30,000 இராஜபுத்திரர்களைக் கொடூரமாகக் கொன்றான். பாமினி சுல்தான்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு லட்சம் ஹிந்துக்களைக் கொல்லும் நோக்கத்தோடு பகை கொண்டு துன்புறுத்தி அழித்தனர்.

இவ்விதமாக 800 ஆண்டுகள் ஹிந்துக்களை கழுவேற்றிக் கொன்றார்கள் மூர்க்கர் கூட்டத்தினர். அமைதியை விரும்புபவர்களும் தர்மத்தைப் பின்பற்றுபவர்களுமான ஹிந்துக்கள் இவ்விதம் கொடூரமாக மரணித்தனர்.

பாரத தேசத்தில் நடந்த லட்சக்கணக்கான ஹிந்துக்களின் கழுவேற்றம், இந்துப் பெண்களின் கூட்டு மானபங்கம், ஆயிரக் கணக்கான புராதன ஹிந்து கோயில்கள், கர்பாலயங்களின் துவம்சம்… உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்த அராஜகங்களை விட பல மடங்கு அதிகம் என்று வரலாறு கூறுகிறது.

பிரமுக வரலாற்றாசிரியர் டா. கோன்ராட் எல்ஸ்டி, Was there an Islamic Genocide of Hindus? என்ற கட்டுரையில் பாமினி சுல்தான்கள், முகமது கஜினி, முகமது கோரி ஆகியோரின் அடக்குமுறை குறித்து எழுதியுள்ளார்.

தன் ‘நெகேஷன் இன் இந்தியா’ என்ற நூலில் அவர் முஸ்லிம்களின் முற்றுகைகள், ஹிந்துக்களின் வாழ்வா- சாவா போராட்டங்கள், முழு நகரங்களையும் தீக்கிரையாக்கியது, லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கழுவேற்றப்பட்டது, லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைகளாக சிறைப் படுத்தப்பட்டது… போன்ற கொடுமைகளை விவரித்துள்ளார்.

வில்துரண்ட், ‘ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன்: அவர் ஓரியண்டல் ஹெரிடேஜ்’ (1935) என்ற தன் நூலில் லட்சக்கணக்கான ஹிந்துக்களை கழுவேற்றியது, பலவந்தமாக மதம் மாற்றியது, பெண்களையும் குழந்தைகளையும் அபகரித்தது, கோவில்களை இடித்துத் தகர்த்தது… போன்றவை மிகக்கொடூரமாக ரத்த ஆறு ஓடும்படி செய்தன என்றும் இஸ்லாமிய மேதாவிகளும் வரலாற்றாசிரியர்களும் இந்தச் சம்பவங்கள் குறித்து மிகவும் உயர்வாக புகழ்ந்து எழுதி உள்ளார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இதன் மூலம் அவர்களின் மத வெறியும் மனிதாபிமானமற்ற செயலும் வெளிப்படுகிறது.

இர்பான் ஹுசேன், Demons from the past என்ற தன் நூலில் ரத்த ஆறுகள் ஓடிய அந்த காலகட்டத்தில் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஹிந்துக்கள் மீது துளியும் கருணை காட்டவில்லை… இன்று வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படிக்கும் ஒவ்வொரு முஸ்லிம் அரசனின் கைகளும் ஹிந்துக்களின் ரத்தத்தால் நனைந்தவையே என்று எழுதுகிறார்.

முகமது கஜினி சோமநாத் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த 50,000 ஹிந்துக்களை கொன்று அழித்தான். இத்தனை அராஜகங்கள் செய்த மூர்க்கர்கள் தாம் செய்த கொடூரங்களை ஜிஹாத் என்று கூறி புகழ்ந்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

பெர்ஷியன் வரலாற்றாசிரியர் வாஸப், ‘அலுல்-தின்-கில்ஜி, கும்பயாத் நகரத்தை ஆக்கிரமித்து ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்து ரத்த ஆறு ஓடச் செய்து தங்கம் வெள்ளி ஆபரணங்களுடன் பெண்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக எடுத்துச் சென்றான் என்று தெரிவிக்கிறார்.

ஹிந்துக்களும் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாம் சட்டம் பற்றி ஒரு மதப் பெரியவரின் கூற்றைப் பாருங்கள்…

“ஹிந்துக்கள் வெறும் மண் போன்றவர்கள். முஸ்லிம்கள் அவர்களிடம் வெள்ளி கேட்டால் பணிவோடு அவர்கள் தங்கத்தை தரவேண்டும். முஸ்லிம்கள் இந்துவின் வாயில் துப்பினால் ஹிந்து மறுப்பு இல்லாமல் வாய் திறந்து காட்ட வேண்டும். இறைவன் ஹிந்துக்களை முஸ்லிம்களின் சேவைக்காகவே படைத்துள்ளான். இந்துக்கள் இஸ்லாம் மதத்தை ஏற்காவிட்டால் அவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்த வேண்டும். இறுதியில் கொன்றுவிட வேண்டும். அவர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும்”. இது எத்தகைய கொடுமை என்பதை கவனிக்க வேண்டும்.

taimoor museum
taimoor museum

தைமூர் (பொ.ஆ.1398- 99) மூலம் ஒரு லட்சம் போர்க் கைதிகள் கொல்லப்பட்டதை மிக மிக இழிவான செயலாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

ஆனால் தைமூர் கூறுவதைப் பாருங்கள்… “இஸ்லாமுக்கு எதிரான இந்த லட்சம் ஹிந்து கைதிகளை விடுதலை செய்வது எங்கள் யுத்த நீதிக்கு எதிரானது. அதனால்தான் அவர்களை கத்திக்கு இரையாக்கினேன்”.

டெல்லி கோட்டையை ஆக்கிரமித்த பின் தைமூர் கூறியது: “மிகக் குறைந்த நேரத்தில் கோட்டையில் இருந்த அனைவரையும் கத்திக்கு இரையாக்கினேன். ஒரு மணி நேரத்திற்குள் பத்தாயிரம் ஹிந்துக்களின் தலைகள் சீவப்பட்டன. இஸ்லாமிய கத்திகளை ஹிந்துக்களின் ரத்தத்தால் கழுவினோம். வீடுகளுக்கு தீ வைத்தோம். பெண்கள், குழந்தைகள், அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் எங்கள் வசமாயின”.

babar nama
babar nama

பாபர் (பொ.ஆ. 1526-1530) தன் பாபர்நாமாவில், “நான் சந்தேரி மீது படையெடுத்துச் சென்று அல்லாஹ்வின் கருணையால் சில மணி நேரத்திலேயே வெற்றி பெற்றேன். ஹிந்துக்களை கொன்றழித்தேன். பல ஆண்டுகளாக ‘தாருல் ஹர்ப்’ (முஸ்லீம் அல்லாத பிற தேசமாக இருந்த நாடு) ‘தாருல் இஸ்லாம்’ (முஸ்லிம் நாடாக) மாறியது. இஸ்லாமுக்காக நான் அலைகிறேன். இந்துக்களோடு போர் புரிந்தேன். இறப்பதற்கும் தயாரானேன். அல்லாஹ்வுக்கு நன்றிகள். நான் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றவனானேன்”.

ஆப்கான் அரசன் அகமது ஷா அப்தாலி பொ.ஆ.1757 ல் இந்தியா மீது படையெடுத்து வந்த ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவை அடைந்தான். தாரக்-இ-அலங்கிரி யில் குறிப்பிட்டுள்ள அப்தாலி காட்சிகள்:

ahmed sha abdali
ahmed sha abdali

“அப்தாலி படைவீரர்களுக்கு அவர்கள் எடுத்து வந்த ஒவ்வொரு தலைக்கும் ஐந்து ரூபாய் தருவதாக அறிவித்தார்கள். கைதியாக உள்ள ஹிந்துக்களைக் கொல்லாத வீரனைக் கொல்லுவோம் என்றும் தெரிவித்தார்கள். ஒவ்வொரு வீரனும் குதிரைகளின் மீது கொள்ளையடித்த சொத்துக்கள், கன்னிப் பெண்கள், கைதியாக பிடித்த ஆண்களின் தலைகள் மீது வைத்த பைகளில் வெட்டப்பட்ட ஹிந்துக்களின் தலைகளை அடைத்து வைத்து காசுக்காக எடுத்துச்சென்றனர். இது தினமும் தொடர்ந்து நடந்து வந்தது. இரவுகளில் பலாத்காரமாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் அழுகுரல்களும் கூக்குரல்களும் மூர்க்கர்களின் காதுகளில் விழவில்லை. வெட்டுண்ட ஹிந்துக்களின் தலைகளை தூண் போல் குவித்து வைத்தனர். இந்த அடக்குமுறை மதுராவிலிருந்து ஆக்ராவுக்கும் அதன் பிறகு நாடெங்கும் பரவியது”.

துரதிருஷ்டவசமாக இன்றைய இந்தியர்களுக்கு முக்கியமாக ஹிந்துக்களுக்கு நம் முன்னோர்கள் மூர்க்கர்களின் கைகளில் அனுபவித்த துன்பங்கள், பட்ட சித்திரவதைகள், நம் தர்மத்தை காக்க அவர்கள் ஆற்றிய தியாகங்கள்… எதுவும் தெரிவதில்லை.

வரலாற்று ஆசிரியர்களில் பலர் இவ்விஷயங்கள் குறித்துப் பேச மாட்டார்கள். நம் அரசுகள் ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கையால் உண்மைகளை நமக்கு தெரிவிக்காமல் பொய்களை கற்பித்து, நம் தர்மத்திற்கு தீவிரமான நஷ்டம் ஏற்படுத்தியவர்கள் பற்றி மூடி மறைக்கும் முயற்சிகளைச் செய்கின்றன.

உலகம் கூட துர்பாக்கியமான அந்த 800 ஆண்டுகளில் கொடூரமாக கொல்லப்பட்ட லட்சக்கணக்கான ஹிந்துக்கள், சீக்கியர்கள் குறித்து முழுமையாக மறந்துபோனது.

பொ.ஆ.1000- 1525 நடுவில் ஹிந்து ஜனத்தொகை சுமார் 8 கோடிக்குக் கீழாகக் குறைந்தது என்று இந்திய வரலாற்று ஆசிரியர் ஆச்சாரிய கேஎஸ் லால் கணக்கிடுகிறார். இந்த நஷ்டம், அரபி, ஆப்கான், துருக்கி, மொகல்களின் ஆட்சி காலத்தில் நடந்தது. உலக வரலாற்றில் இத்தகைய நஷ்டம் வேறு எந்த மதத்திற்கும் ஏற்படவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

பல ஹிந்து வீரர்கள் தர்மம், கலாச்சாரம், நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அனைத்தையும் தியாகம் செய்து நாம் இன்றும் ஹிந்துக்களாக வாழ்வதற்குக் காரணமாகி உள்ளார்கள்.

நவீன காலத்தில் பல பெயர்களில், பல வடிவங்களில் மூர்க்கர்கள் வன்முறையில் ஈடுபட்டு உலக அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகிறார்கள். மனிதாபிமானிகளுக்கு இது கண்ணில் படாது!?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe