தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோரின் நலன்களை கருத்தில் கொண்டு, அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் தேசிய தகவல் மையம் ((NIC)), சென்னை இணைந்து உருவாக்கியுள்ள “ஓய்வூதியர்கள் தரவு தளம்” (Pensioners’ Portal) உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தலைமைச் செயலகத்தில் சென்ற மாதம் (ஜன. 18) துவக்கி வைத்தார். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெற்ற விவரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்துப்பெறல், உயர்த்தி வழங்கப் பட்ட குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப் பயன்கள் வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற விவரங்களை கருவூலங் களை அணுகாமலே ஓய்வூதியர்களும் குடும்ப ஓய்வூதியர்களும் கணினி வாயிலாக அறிந்து பயன் பெறும் வகையில் இந்த தரவு தளம் உள்ளது.

இத் தரவுதளத்தின் வாயிலாக ஓய்வூதியர்களும் குடும்ப ஓய்வூதியர்களும் மேற்காணும் தகவல்களைப் பெறுவது மட்டுமின்றி ஓய்வூதியர் வாழ்நாள் சான்றளித்த விபரம்,

80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விபரங்கள், ஓய்வூதியர் வாரிசு தாரர் நியமனம், பண்டிகை முண்பணம், புதியமருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் குடும்ப நலநிதி பிடித்தங்கள் போன்ற விவரங்கiயும் தங்களது ஓய்வூதிய கொடுவை எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய இயலும்.

இதுதவிர இத்தரவுதளத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்பஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், ஓய்வூதியர்களுக்குத் தேவையான முக்கிய படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டியபடிவங்களை இத்தரவுதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகருவூலங்களிலும், ஓய்வூதிம் வழங்கும் அலுவலகம், சென்னையிலும் சமர்ப்பிக்கலாம்.

இதன் மூலம் தமிழக அரசின் சுமார் 7.30 இலட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள். ஓய்வூதியர் தரவு தளத்தினை https://tnpensioner.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...