பச்சை தக்காளி பிரட்டல்
தேவையான பொருட்கள்
பச்சை தக்காளிக் காய் – 4
தக்காளிப் பழம் – 1
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டி
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளிக் காய் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். காய் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
சாதத்துடன் சாப்பிட புளிப்புச் சுவையுடன் கூடிய பச்சை தக்காளி பொரியல் தயார்.
கொத்தமல்லித் தழையை தூவி பரிமாறவும்.
(காரம் அதிக விரும்புபவர்கள் பச்சை மிளகாயைக் கூடுதலாகச் சேர்க்கலாம்.)