முந்திரி கீர்
தேவையானவை:
முந்திரி – 15,
கசகசா – ஒரு டீஸ்பூன்,
பனை வெல்லம் – 100 கிராம்,
தேங்காய்ப்பால் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
பால் – சிறிதளவு (காய்ச்சி ஆறவைத்தது).
செய்முறை:
முந்திரியைப் பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் கசகசா சேர்த்து விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் பனை வெல்லம் சேர்த்து, அது மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.
அடிகனமான பாத்திரத்தில் பனை வெல்லக் கரைசல், முந்திரி – கசகசா விழுது சேர்த்து கைவிடாமல் கிளறி, நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இளம் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.