ஜகன் கட்சியினரின் ரவுடித்தனம்! பஞ்சாயத்து தேர்தல் வருதுல்ல…!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ycp telugu desam fight - 2026
  • ஒய் சி பி தலைவர்களிடம் தொடை தட்டி சவால் விட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர்.
  • ஜகன் கட்சியினரின் ரௌடித்தனம்.

மாநில அளவில் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் பின்னணியில் ஒய்சிபி கட்சி செய்யும் அநியாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த கட்சியின் தலைவர்கள் தவிர வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாருமே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடுத்து நிறுத்துவதற்கு ஒய்சிபி தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். எதிர்கட்சிகளைக் சேர்ந்த தலைவர்களோ ஆதரவாளர்களோ நாமினேஷன் செய்ய முடியாமல் அங்கங்கே அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள் .அதை எதிர்த்து முன் சென்றவர்களை பதவி மதத்தோடு தாக்குதல் நடத்தி ரத்தம் சிந்த செய்துவருகிறார்கள்.

இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் கூட எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர் ஒருவர் ஆளும் கட்சி தலைவர்களுக்கு சவால் விட்டார். நாமினேஷன் செய்யும் உரிமை தனக்கும் இருக்கிறது என்றும் யார் என்ன செய்வார்களோ பார்த்து விடுகிறேன் என்றும் தொடையைத் தட்டி சவால் விட்டார்.

ஆந்திரபிரதேஷ் சித்தூர் மாவட்டம் புங்கனூரு மண்டலம் சிங்கிரிகுண்டா பஞ்சாயத்தைச் சேர்ந்த அஞ்சிரெட்டி என்பவர் 60 வயதிலும் காட்டிய வீர தீரத்தைப் பார்த்த கட்சித் தலைவர்களும் ஆதரவாளர்களும் உற்சாகம் அடைந்தனர். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை புகழ்ந்தனர்.

என்ன நடந்தது என்றால்… சிங்கிரிகுண்ட பஞ்சாயத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தரப்பில் எம்பிடிஸியாக நாமினேசன் தாக்கல் செய்வதற்காக அஞ்சிரெட்டி மண்டல அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்னே அங்கு வந்து சேர்ந்திருந்த ஒய்சிபி தலைவர்கள் அஞ்சிரெட்டியைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு நாமினேஷன் பேப்பர்களை அவர் கையிலிருந்து பலவந்தமாக பிடுங்கிக் கொள்ள முயற்சி செய்தனர். இதனால் கோபத்திற்கு ஆளான அஞ்சிரெட்டி சவால் விட்டார்.

உண்மையாகவே மக்கள் ஆதரவு இருந்தால் குடியாட்சியின் முறைப்படி தேர்தலை நடத்த வேண்டுமே தவிர இவ்வாறு ரவுடிகளை போல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் அவ்வாறு நடந்து கொண்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

அஞ்சிரெட்டியின் எச்சரிக்கையால் கோபமடைந்த ஒய்சிபி கட்சியைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் உடனடியாக ஓடிச்சென்று ஒரு பெரிய ஆயுதத்தை தூக்கிக் கொண்டு அவரை அடிக்க வந்தபோது போலீசார் அவரை தடுத்தனர். அந்த சம்பவத்திற்கு தொடர்பான வீடியோ இப்போது வைரலாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

போலீசார் அங்கேயே இருந்த ஒய்சிபி தலைவர்களை குறித்து இவ்வாறு தாக்குதல்களை நடத்துவதும் நாமினேஷன் பேப்பர்களை கிழித்து போடுவதும் அதிகார மதத்தை வளர்ப்பது போல் இருக்கிறது என்று குற்றம் சாட்டினர். பிறருடைய உரிமைகளை காலால் தேய்த்து அழிப்பதற்கு முயற்சிப்பதை போலீசார் விடக்கூடாது என்றும் அந்த விஷயத்தில் போலீசார் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெலுங்குதேசம் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.