
முருங்கக்கீரை அடை
தேவையானவை:
வரகு அரிசி – 100 கிராம்,
சாமை அரிசி – 50 கிராம்,
சிவப்பு அரிசி – 50 கிராம்,
மிளகு – 10,
காய்ந்த மிளகாய் – 3,
கடலைப்பருப்பு – 100 கிராம்,
துவரம்பருப்பு – 50 கிராம்,
கறுப்பு உளுந்து – 50 கிராம்,
முருங்கைக்கீரை, சிறுகீரை – தலா ஒரு கைப்பிடி அளவு,
புதினா – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,
எண்ணெய் – 100 மில்லி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வரகு அரிசி, சாமை அரிசி, சிவப்பு அரிசி, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் தெளித்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
முருங்கைக்கீரை, சிறுகீரை, புதினாவை ஆய்ந்து, அலசி, பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும். இத்துடன் உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: அடைக்கு அவியல் சிறந்த காம்பினேஷன். முருங்கைக்கீரை இரும்புச் சத்து, விட்டமின் சத்துக்கள் நிறைந்தது. உடல் வலிமையடைய உதவும்.