
பூசணி கூட்டான்
தேவையானவை:
பூசணிக்காய் – 100 கிராம்,
வாழைக்காய் – ஒன்று,
தேங்காய் துருவல் – அரை கப்,
புளிப்புத் தயிர் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 4,
கடுகு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காய்கறிகளை தோல் சீவி பொடியாக நறுக்கி வேகவிடவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். வேக வைத்த காய்கறியுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, கடைந்த தயிரை சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கிவிடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.