April 28, 2025, 1:53 PM
32.9 C
Chennai

மீண்டும் ஒரு திருமணம்… இம்முறை இயக்குனர் பீட்டர் பால்… வனிதா விஜயகுமாரின் அழைப்பிதழ்!

vanitha vijayakumar peter paul
vanitha vijayakumar peter paul

தமிழகத்தில் கோடம்பாக்க கலைக் குடும்பம் என்று அறியப்பட்ட நடிகர் விஜயகுமார் மகள் வனிதா, இப்போது மீண்டும் ஒரு திருமணம் செய்ய இருக்கிறார். தன் திருமணத்துக்கான அழைப்பிதழை இப்போது அனுப்பியுள்ள அவர், கொரோனா காலம் என்பதால் மிகக் குறைவான நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் தனது திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார். 

விஜய் நடித்து 1995ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். பிறகு மாணிக்கம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை. இதனால் சினிமா ராசி ஒத்துழைக்கவில்லை என்று கூறி, நடிப்பை ஓரங்கட்டினார். அண்மையில் தனியார் டிவி.,யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி, இவரை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. 

வனிதா கடந்த 2000ஆம் ஆண்டில் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் வனிதா! சண்டை சச்சரவுகளுடன் நகர்ந்த திருமண வாழ்வுக்கு முழுக்கு போட்டு, 2007ஆம் ஆண்டில் அவரை விவாக ரத்து செய்தார். 

விவாகரத்து ஆன கையுடன், ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரைத் திருமணம் செய்தார். அந்த வாழ்க்கையும் கசந்த நிலையில்,  2010ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். 

அதன் பின்னர் நடன இயக்குனர் ராபர்ட்டுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வனிதா காலம் கடத்தினார் என்று கூறப் பட்டது. ஆனால் அவரை விட்டும் பிரிந்தார் வனிதா.

ALSO READ:  உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

முதல் கணவர் மூலம் ஒரு மகன், ஒரு மகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகளும் என வனிதாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் வனிதா விஜயகுமார் மீண்டும் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று  கிசுகிசுக்கப் பட்ட நிலையில், தனது திருமணம் குறித்து நேற்று ஊடகத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார் வனிதா. தாம் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் குறித்த அறிமுகத்தையும் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.  

பீட்டர் பால் ஒரு ஃப்லிம் மேக்கர் என்கிறார் வனிதா விஜயகுமார்.  கொரோனா ஊரடங்கு என்பதால் மிக நெருங்கிய நண்பர்கள் உறவினர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்யவுள்ளாராம்.   இவர்களது திருமணம் வருகிற ஜூன் 27ஆம் தேதி சனிக்கிழமை, வனிதாவின் இல்லத்தில் நடைபெறுகிறது

vanitha vijayakumar marriage
vanitha vijayakumar marriage

இது குறித்து வனிதா விஜயகுமார் தெரிவித்த தகவலில்… 

அவர் என் கனவை நனவாக்கி இருக்கிறார்.  நான் ஒருபோதும் அறியாத வெற்றிடத்தை அவர் நிரப்பினார். ஆச்சரியப்படும் விதமாக நான் அவரைச் சுற்றி பாதுகாப்பாகவும் முழுமையானதாகவும் உணர்ந்தேன். அவர் ஒரு நண்பராக என் வாழ்க்கையில் புகுந்தார். 

ஊரடங்கு காலத்தின் போது எனது YouTube சேனலுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆதரவு இல்லாமல் நான் தவித்த  போது எனக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் உதவினார். நான் நிம்மதியாக, மிகவும் அமைதியாக, மன அழுத்தமில்லாமல், கவனித்துக்கொள்வதை உணர்ந்தேன். 

ALSO READ:  பாலமேடு அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்!

என் குழந்தைகளுக்குத்தான் நான் எப்போதும் முன்னுரிமை அளித்திருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் ஒரு கட்டத்தில் என்  திருமணம் குறித்து என்னிடம் கேட்டபோது, எதுவும் பேச முடியாமல் தவித்தேன். (என்னுள் நான் ஆம் என்று கத்திக்கொண்டிருந்தேன்)

என் குழந்தைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் அவர்களிடம் பேசியபோது அவர்கள் சரி என்றார்கள். இது எனக்கு நேர்ந்த மிகச் சிறந்த விஷயம் என்று என் மகள் சொன்னபோது கண்ணீர்தான் என் கண்களில் திரண்டது.! மேலும் அவர்களும் அவரை நேசிக்கிறார்கள். ஒற்றைத் தாயாக இருப்பது நான் கேட்டு அடைந்ததல்ல. இது ஒரு நீண்ட தனிமையான வேதனையான போராட்டம். குறிப்பாக எனது “குடும்பம் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து” எந்த உதவியும் ஆதரவும் இல்லாதபோது!

என்னைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விக்கும் என் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன், இது சரியான நேரத்தில் பயத்தில் இருந்தும் குழப்பத்திலிருந்தும் முடிவுகளை எடுக்கச் செய்தது. ஒருமுறை நான் என் வாழ்க்கையை எனக்காகவே வாழ முடிவு செய்தேன்! எனக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள், எனக்கு வயதாகும்போது என் கையை என்றென்றும் பிடித்துக் கொள்ள யாராவது திடமாக இருக்கவேண்டும்..

ALSO READ:  பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும்!

என் கடினமான காலங்களில் என்னை ஆதரித்த மற்றும் என்னை ஊக்குவித்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த  நன்றி. என் மகிழ்ச்சியான நேரத்திலும் நீங்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆசீர்வாதம் எனக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது.

 பின்குறிப்பு: பீட்டர் பால் யார் என்று கேட்கிறவர்களுக்கு?

அவர் தொழிலால் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் .ஒரு எளிய, அக்கறையுள்ள, அன்பான, நேர்மையான மனிதர்! என் இதயத்தைத் திருடி, அவரை காதலிப்பதில் என்னை தலைகீழாக வீழ்த்தியவர்.

மீதமுள்ளவற்றை… அவரது திட்டங்களை திரையில் மிக விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

நம்பிக்கை கொள்ளுங்கள். அனைத்து ‘சிங்கிள்’ களுக்கும் ஒரு இதயப்பூர்வமான தகவல். உண்மையிலேயே தகுதியான ஒருவரைத் தேடுங்கள், கண்டுபிடிக்கப்படுவதற்குக் காத்திருங்கள். 

தொடருங்கள் . அங்கே ஓர் அற்புதம் இருக்கிறது !!!

அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்வதுடன் மட்டுமே திருமணம் நடைபெறும்.  திருமணத்திற்குப் பிறகு எனது ரசிகர்கள் நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் திருமண படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories