
வெண்டைக்காய் பக்கோடா
தேவையானவை:
இளசான வெண்டைக்காய் – கால் கிலோ (வில்லைகளாக நறுக்கவும்),
கடலை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 20 கிராம்,
சோள மாவு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – கால் கிலோ,
மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து நீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.