
தக்காளி இடியாப்பம்
தேவையானவை:
தக்காளி – 200 கிராம்,
இடியாப்ப மாவு – 2 கப்,
ஊறவைத்த பச்சைப் பட்டாணி – 3 டேபிள்ஸ்பூன்,
துருவிய கேரட் -2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
குடமிளகாய் – பாதியளவு (நீளமாக, மெலிதாக நறுக்கவும்), மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை,
எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப.
செய்முறை:
இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அடிகனமான பாத்திரத்தில்- 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கவைத்து இறக்கி, இடி யாப்ப மாவில் கொட்டிக் கிளறி, இடியாப்ப குழலில் மாவை வைத்து இடியாப்ப மாகப் பிழிந்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் உதிர்த்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய குடமிளகாயை வதக்கி, பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி, நன்கு சுருண்டு வந்ததும் கரம்மசாலா சேர்த்துக் கிளறி இறக்கவும். உதிர்த்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்துக் கலந்துவிடவும்.