vijay birthday annadhanam
vijay birthday annadhanam

திரைப்பட நடிகர் விஜயின் 46வது பிறந்த நாளான இன்று கரூரில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திரைப்பட நடிகர் விஜய் 46வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் விஜய் கொண்டாட்டங்களை தவிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் கொரான தொற்றிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ கரூர் வேம்பு மாரியம்மன் திருக்கோவிலில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் விஜய் பெயரிலும் தமிழக மக்கள் அனைவருக்கும் நலமுடன் வாழ வேண்டும் அர்ச்சனை செய்யப்பட்டது. பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மதியழகன்,மாவட்ட செயலாளர் பாலு, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம்,மாவட்ட துணைத்தலைவர் விக்னேஸ்வரன்,மாவட்ட துணைச்செயலாளர் சசிகாந்த்,கரூர் நகர தலைவர் கனகராஜ் மற்றும் கரூர் நகர செயலாளர்கள், கரூர் ஒன்றிய தலைவர்கள் செயலாளர்கள் தாந்தோன்றி ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending