October 22, 2021, 1:26 pm
More

  ARTICLE - SECTIONS

  குழந்தைபேறு அடைய எளிய வழிகள்!

  baby

  மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

  இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

  அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.

  இன்னொரு வைத்தியமும் இருக்கு!

  பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.

  உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க.

  பெரும்பாலான சந்தர்ப்பங்களில்ஒரு பெண்ணுக்கு ஒழுங்கற்ற சுழற்சிகள் உள்ளது என்றால், அது ஒன்று 26 நாட்கள் (குறுகியசுழற்சி) அல்லது 32 நாட்கள் (நீள் சுழற்சி) நீடிக்கும்
  உங்கள் குறுகிய சுழற்சி நாட்களிலிருந்து 18 கழிக்கவும். உதாரணமாக உங்கள் குறுகிய சுழற்சி 26 என்றால அது 8 ஆக இருக்கும்.

  உங்கள் நீண்ட சுழற்சி நாட்களிலிருந்து 11 கழிக்கவும். உதாரணமாக உங்கள் குறுகிய சுழற்சி 32 என்றால அது 21 ஆக இருக்கும்.

  உங்கள் நாள்காட்டியில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி நாட்களின் இடையே வரும் நீங்கள் கணக்கிட்ட நாட்களை வட்டமிடவும். உதாரணமாக முதல் விஷயத்தில் அது 7 லிருந்து 22 அதாவது உங்கள் மாதவிடாய்க்கு பிறகு 7 ஆவது நாளிலிருந்து சுழற்சியின் 22வது நாள் வரை. இப்போது இந்த நாட்கள் தான் நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டிய நாட்கள்.

  பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.
  1) கருப்பையில் புழுக்கள் இருந்தால் மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

  சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் பூசி புணர குழந்தை உண்டாகும். புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும். விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்புச்சிகள் சாகும்.

  2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும்.

  3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.

  4) உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து தண்டில் புசி புணரவும்.

  வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன. கல்யாண முருங்கைப் புவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.

  அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.
  இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.

  மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சுரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

  சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும். அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.

  பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும் மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.

  குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  மேலும் மருத்துவர்கள் கருவில் விந்து சேருவதற்கு இந்த முறையான உடலுறவை அறிவுறுத்துகிறார்கள்.

  மிஷனரி நிலை: பெண் கீழே, ஆண் மேலிருந்து உடலுறவு செய்யும் நிலையிது. இந்த பொசிஷன் பலருக்கும் போர் அடித்தாலும், இதில் குழந்தை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆணின் விந்தணுக்கள் பெரிய அளவில் வீணாக்காமல், பெண்ணின் கருமுட்டையை அடையும். இதுவே, பெண் மேலிருந்து செய்யும் நிலையினில் (Women on top position), பெண்ணுறுப்பு வழியாக விந்துக்கள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கரு உருவாக்க மிஷனரி நிலை சிறந்தது.

  இந்த நிலையில், அவள் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உடலுறவு கொண்டால் மேலும் சிறப்பாகும்

  ஸ்பூன் முறை : இந்த முறை உங்களுக்கு பிடிக்கலாம். இதில், ஆண்-பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு இருக்கவேண்டும். குறிப்பாக ஆண், பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். பின்னாலிருந்து உறவுகொள்ளும் போது அவள் கால்கள் வி வடிவில் இருக்கலாம். எனவே விந்தணுக்கள் விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் கன்பார்ம்

  சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-