திருப்பூரிலும் கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடு!

கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
shops - 2026
shops closed file picture

கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் நாளை நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி வரை மதுரையில், கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப் பட்டுள்ளது. 

மதுரையைத் தொடர்ந்து கோவை, திருப்பூரிலும் இதுபோன்ற நேரக் கட்டுப்பாடு அமல் படுத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது முன்னதாக மதுரை நகரின் வர்த்தகர்கள் மனிதர்கள் தாங்களாகவே கடைகள் திறப்பதற்கு காலை முதல் மதியம் 2 மணிவரை நேரக் கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர் அதேநேரம் அதைத் தொடர்ந்து நிர்வாகம் மதுரை மாநகரில் நாளை இரவு முதல் வரும் 30ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தது.

திருப்பூரில் நாளை முதல் அனைத்து கடைகளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.கடைகள் வர்த்தக நிறுவனங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.  அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளுக்கும் கட்டுப்பாடு பொருந்தும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

கொரோனா பரவல் எதிரொலியாக, கோவையில் வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட முடிவு செய்யப் பட்டுள்ளது.

அது போல், நாளை முதல் ஜூலை1-ம் தேதி வரை கடைகள் நேரக்கட்டுப்பாடுடன் செயல்படும். நேரக்கட்டுப்பாடு குறித்து திருப்பூர் வணிகர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.