ஆரோக்கிய சமையல்: மூங்கில் அரிசி பிரியாணி!

Published:

Screenshot_2020_0812_124249

மூங்கில் அரிசி பிரியாணி

தேவையானவை:

மூங்கில் அரிசி. – 200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி (எல்லாம் சேர்ந்து). – ஒரு கப், வெங்காயம், தக்காளி. – தலா ஒன்று, உப்பு. – தேவைக்கேற்ப, நெய். – 4 டீஸ்பூன், எண்ணெய். – ஒரு டீஸ்பூன்.

அரைக்க:

பூண்டு – 2 பல்,

பச்சை மிளகாய் – 2,

கொத்தமல்லி மற்றும் புதினா தழை இரண்டும் சேர்ந்து – அரை கப்,

இஞ்சி – ஒரு துண்டு,

தனியா,கரம்மசாலாத்தூள் – தலா அரை டீ.பூன்,

மிளகாய்த்தூள். – அரை டீஸ்பூன்.

தாளிக்க:

பட்டை. – சிறிய துண்டு, ஏலக்காய், லவங்கம் – தலா 3, பிரிஞ்சி இலை – சிறிது.

செய்முறை:

மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்க வும். அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கி, பின் காய்கறி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். கொதிவந்தந்தும் மூங்கில் அரிசியை சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img