ஆரோக்கியமா ஒரு தட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0812_125323

வரகரசித் தட்டை

தேவையானவை:

வரகரசி மாவு (கடைகளில் கிடைக்கிறது) -. . – ஒரு கப்,

பச்சரிசி மாவு. – 3 டீஸ்பூன்,

பொட்டுக் கடலை மாவு – கால் கப், ஊறவைத்த உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயம் – தேவையான அளவு, கொத்த மல்லித்தழை மற்றும் பச்சைமிளகாய் விழுது இரண்டும் சேர்த்து. – 2 டீஸ்பூன்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 300 கிராம்,

தண்ணீர் மற்றும் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வரகரசி மாவைச் சலித்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறிய பின் எண்ணெய் தவிர பிற பொருட்கள் அனைத்தையும் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்கு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, மாவை சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, தட்டையாகத் தட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.