November 27, 2021, 9:01 am
More

  அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கம், வெட்டை நோய், வீரிய விருத்தி, வெறிநாய்க்கடி, வேனல் கட்டி..!

  health tips 1
  health tips 1

  வீக்கம் சரியாக…
  முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து விக்கங்களுக்கும், வாயு தங்கிய இடங்களுக்கும் பற்று போடலாம். ஆனால், நோய் இலேசாக இருக்கும் போது பற்று போட்டால் புண்ணாகி விடும்.

  கோவை இலையை கட்டி, வீக்கம், மூலவியாதி முதலியவற்றுக்கு
  கட்டுவதால் பிணி நீங்கும். கோவைக் கட்டியின் வேர்ப்பட்டை வாந்திபேதியை கண்டிக்கும்.

  வீரிய விருத்திக்கு…

  முருங்கை விதை, முருங்கைப் பிசின், வெங்காய விதை, நீர் முள்ளிவிதை. நாயுருவி விதை வகைக்கு 40 கிராம் எடுத்து பசும்பால் விட்டரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாகச் செய்து காலை. மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு பசும்பால் பருகி வர தாது கட்டும். வீரிய விருத்தி ஏற்பட்டு போக சக்தி அதிகரிக்கும்.

  முருங்கைக்கீரையையும் முருங்கைப் பூவையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள தாது விருத்தியும், இரத்த சுத்தமும் ஏற்படும்.

  கசகசா, வால் மிளகு. பாதாம் பருப்பு, கற்கண்டு சம அளவு எடுத்து இடித்து தேன் போதுமான அளவு சேர்த்து, லேகிய பதமாகக் கிளறி வைத்துக் கொண்டு, சுண்டைக்காயளவு சாப்பிட்டு பால் குடித்து வர வீரிய விருத்தியும் உடலுறவில் பலமும் ஏற்படும்.

  வெட்டை நோயா?

  சீரகம், வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்து தசுக்கி கொட்டைப் பாக்களவு பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட மூன்றே நாள்களில் குணமாகும். அந்த நாள்களில் புளி, காரம் சேர்க்கக் கூடாது போகமும் கூடாது.

  வெள்ளை வெட்டை நோய்களுக்கு செம்பருத்திப் பூக்களை காம்பைக் கிள்ளி விட்டு வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்க நான்கைந்து வாரங்களில் நல்ல குணம் தெரியும்.

  வெள்ளெருக்கு இலைகளைப் பறித்து மூன்று மிளகு வைத்து அரைத்து சுண்டைக்காயளவு பசும்பாவில் கலந்து மூன்று நாள்கள் சாப்பிட வெள்ளை, வெட்டை நோய் நீங்கும். புளி, கடுகு அறவே நீக்க வேண்டும்.

  வெறிநாய்க் கடிக்கு…

  மணித்தக்காளி இலைகளை இடித்து சாறு பிழிந்து அரைக்கால் லிட்டர் காலை, மாலை வெறும் வயிற்றில் உள்ளுக்கு மூன்று நாள்கள் கொடுக்கவும் அதே இலையை கசக்கி கடித்த இடத்தில் ஒரு நாளைக்கு ஒரு கட்டு போடவும். ஆறுநாள்களுக்கு குளிக்கக்கூடாது, உப்பு, புளி, கடுகு, நல்லெண்ணெய் தவிர்க்க வேண்டும். தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போட வேண்டிய அவசியம் இல்லை.

  வேனில் கட்டிகளுக்கு…

  அதிக உஷ்ணத்தினாலேயே குழந்தைகளுக்கு கோடை காலத்தில் வேனில் கட்டிகள் வருகிறது. அவரி இவையையும் அவ்வி இலை யையும் சமமாக எடுத்து, அரிசி கழுவிய நீரில் அரைத்துப் பூச கட்டிகள் உடைந்து விடும்.

  வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பையும் கலந்து கட்டியின் மீது தடவி வர சீக்கிரத்தில் கட்டி உடைந்து குணம் தெரியும்.

  மல்லிகைப் பூவை அரைத்து கட்டிகளின் மீது தடவி வர அப்படியே அழுங்கி விடும் வலியும் இருக்காது.

  பழுத்து உடையாமல் வீங்கி குத்தலும் குடைச்சலும் எடுக்கும் கட்டிகளின் மேல் நீளமான புகையிலையை விரித்து அதில் விளக் கெண்ணெய் தடவிப் போட்டு வர கட்டிகள் உடைந்து சீழையும் இரத்தத்தையும் முளையோடு இழுத்து வெளியே தள்ளும்.

  ரொட்டி ஒன்றை எடுத்து அதன் மத்தியில் இருக்கும் பஞ்சு போன்ற பகுதியை எடுத்து, ஒரு கரண்டி தண்ணீரில் அதைக் கரைத்து அனலில் காட்டி மிதமான சூட்டோடு அந்தப் பசையை கட்டி மீது வைத்துக் கட்ட அடுத்த நாளே கட்டி உடைந்து விடும். உபத்திரவமும் குறையும்.

  சப்பாத்திக் காயை (நாகதாளி) முள்ளுடன் அரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக் கட்ட சீக்கிரத்தில் கட்டி உடைந்து தொல்லைகள் குறையும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,108FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-