லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பீட்ரூட் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Beetroot rice
Beetroot rice

பீட்ரூட் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு – 3 மேசைக்கரண்டி
பூண்டு – ஒரு பல்
பீட்ரூட் – ஒன்று (சிறியது)
கேரட் – கால் பகுதி

செய்முறை
தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

அரிசியையும், பாசிப்பருப்பையும் கழுவி வைக்கவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடியிட்டு 3 விசில் வரும் வரை வைத்திருக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து நன்கு மசித்துவிடவும்.

குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் சாதம் தயார். விரும்பினால் நெய் சேர்த்து ஊட்டலாம்.

குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் இந்த சாதத்தைக் கொடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.