
பாம்பு கடிக்காமலிருக்க…
முட்கொழிஞ்சி வேர் அல்லது வெள்ளெருக்கம் வேர், அல்லது வெள்ளைக் குன்றி வேர் ஏதாவது ஒன்றை குளிசமாக கையில் கட்டியிருந்தால் பாம்பு கடிக்காது.
தீப்புண் சரியாக…
சோற்றுக் கற்றாழையில் உள்ள சோற்றுப் பகுதியை எடுத்து தீப்புண்ணில் வைத்தால் ஜில்லென்று எரிச்சலுக்கு சுகமாக இருக்கும். கொப்புளமும் எழாது.
சுண்ணாம்பிலே நிறைய தண்ணீரை ஊற்றி இளநீரைப் போலத் தெளிந்ததும் அந்த சுண்ணாம்பு நீரில் தேங்காய் எண்ணெயைக் கலந்து நன்றாக குலுக்கினால் அது வெண்மையான குழம்பாகி விடும். அதனை தீப்புண்கள் மீது தடவினால் குணமாகும்.
தலைச்சுற்றல், மயக்கம் சரியாக…
இரத்தக் குறைவால் தலைச்சுற்றல் ஏற்படும். கரிசலாங்கண்ணி லேகியத்தில் ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தவிருத்தி ஏற்பட்டு தலைச் சுற்றல் சரியாகி விடும்.
ஒரு நெல் அளவு அன்ன பேதி செந்தூரத்தை தேன் விட்டுக் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர குணம் தெரியும்.
சேற்றுப் புண் குணமாக…
கடுக்காயை அரைத்து இரவில் புண்களின் மீது பூசிக் கொண்டு படுத்து காலையில் கழுவி விட குணம் காணலாம்.
அடிக்கடி சேற்றுப் புண் ஏற்பட்டால் ‘மதுஸ்ருஷிச்’ என்னும் ஆயுர்வேத சூரணத்தை தேன், நெய்யுடன், கலந்து தினமும் காலை இரவு 10 கிராம் சாப்பிட்டு வர புண் ஆறுவதுடன் மறுபடி வராது.
அரையாப்புக் கட்டி சரியாக…
எலுமிச்சங்காயளவு கல் சுண்ணாம்பை கலுவத்திவிட்டு ஒரு மணி நேரம் அரைத்த பின் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து திரும்ப ஒரு மணி நேரம் அரைத்து மருந்தை வழித்து அப்படியே அரை யாப்புக் கட்டியின் மேல் கனமாக பூசி வைக்க கட்டியாக இருந்தால் அமுங்கி விடும். பழுத்ததாக இருந்தால் உடைந்து விடும்.