
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருடத்திற்கு ரூ.4 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)
பணி : Assistant Manager மற்றும் Executive
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : வருடத்திற்கு ரூ.4,00,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Assistant Manager
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Executive
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.