
அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுவைக் கொலை செய்ய முயற்சித்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவை செக் நாட்டில் ஜுன் 30 2023 ல் அமெரிக்க FBI கைது செய்தது. மேலும் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் பணி செய்யக்கூடிய விகாஸ் யாதவ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயர்களையும் அமெரிக்கா காட்சிக்குள் கொண்டு வந்தது.
உடனே இந்தியாவில் வாழக்கூடிய தேச விரோதிகள், ‘பாகிஸ்தான் என எண்ணி விட்டீர்களா, இது அமெரிக்கா! அவர்களிடம் உங்களுடைய பாச்சா பலிக்காது’ என அமெரிக்கா பற்றி பெருமை பேசிக் கொண்டார்கள். கூடவே இந்திய அரசுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வாரி வழங்கினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது வெளிநாட்டவர் ஏழுபேர் கைது என்ற செய்தி.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதனைச் சுற்றியுள்ள மலைப் பாங்கான இடங்களில் குக்கி இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குக்கி இன மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.
மெய்தி இனம் நாங்களும் இந்த நாட்டுடைய குடிமக்கள் தான் எங்களுக்கும் சில சலுகைகள் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். பல கட்ட போராட்டங்களுக்கு பின் ஏப்ரல் 2023 உச்ச நீதிமன்றம் மெய்தி இன மக்களுக்கு சில சலுகைகளை வழங்கி உத்தரவிட்டது.
இதனை அடுத்து குக்கி இன மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் குறைந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் மே 3 2023 மாபெரும் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கான மெய்தி இன மக்களைக் கொன்று குவித்தார்கள். பல ஆயிரம் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
மெய்தி இன மக்கள் கடுமையான உழைப்புடன் ஓரளவுக்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருவதால் அவர்களை கண்டு குக்கி இன மக்களுக்கு #பொறாமை ஏற்படுவதுண்டு. எனவேக் கலவரத்தை காரணமாக வைத்து மெய்தி இன மக்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள்.
ஒண்ட வந்த பிடாரி கதையாக இந்திய தேசத்தின் உண்மையான குடிமக்களை மியான்மர் நாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்த மர்ம நபர்கள் கிறிஸ்தவராக மதம் மாற்றி உண்மையான மக்களை துரத்த ஆரம்பித்தார்கள். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு 40 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மணிப்பூரில் இறங்கியது.
இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்ததின் காரணமாக பிரச்னை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசுக்கு நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டமாக இது தெரிய ஆரம்பித்தது. இந்தப் பிரச்சனைக்கு பின்னால் மாபெரும் சக்திகளின் கைகள் இருக்கக் கூடும் என இந்திய அரசு உணரத் தொடங்கியது.
இந்த நேரத்தில் குக்கி இன மக்கள் 40க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார்கள். சமகால சர்வதேச அரசியல் பற்றிய எதுவும் தெரியாமல் இருக்கக் கூடிய திராவிட ஸ்டாக்குகள் போன்று எந்த விதமான அறிவியல் பூர்வமான பொது அறிவும் இல்லாத மலைவாழ் மக்களிடம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ட்ரோன்கள் இருப்பது இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்திய அரசு இதனைப் பற்றி பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
2025 மார்ச் மாதம் மிசோரம் மாநில சட்டசபையில் அம்மாநில முதலமைச்சர் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது தங்கள் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், அதில் பலர் எல்லை தாண்டி மியான்மர் நாட்டுக்குள் சென்றதாகவும் கருத்து தெரிவித்து இரூந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இரு தினம் முன் இந்திய அரசு ஒரு முக்கிய செய்தியை உலகத்திற்கு கொடுத்து இக்கின்றது. சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த சில வெளிநாட்டவர்கள் விதிமுறையை மீறியும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்றதாகவும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் அனைவரையும் கைது செய்ய பட்டதாகவும் தெரிவித்தது.
சில நாடுகளிலிருந்து இந்தியா வந்த இவர்கள் பல இடங்களுக்கு தனித்தனியாக யாருக்கும் சந்தேகம் வராதபடி பிரிகின்றார்கள். பின்னர் ஒரே புள்ளியில் கூடுகின்றார்கள். தங்கள் வேலை முடிந்தவுடன் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று தங்கள் நாடுகளுக்கு புறப்பட தயாராகின்றார்கள்.
என்.ஐ.ஏ., சில திமிங்கலங்களை வேட்டையாட சரியான நேரம் பார்த்து வலை விரித்துக் காத்துக்கொண்டிருந்த அந்த வேளையும் வந்தது. கொல்கத்தா விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனை என் ஐ ஏ., கைது செய்தது. அதேபோன்று லக்னோ மற்றும் தில்லி விமான நிலையத்திலும் மொத்தம் 6 உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தது. பின்னர் தில்லியில் உள்ள #பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். இதில் முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏ உளவாளியும் son of Liberty அமைப்பின் தலைவருமான மேத்திவ் வாண்ட்கே.
இவர்கள் மொத்தமாக இந்தியாவுக்கு சுற்றுலா வந்து தனித்தனியாகப் பிரிந்து சென்று பின்னர் மிசோரம் மாநிலத்தில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். மிசோரத்தில் உள்ள சமூக விரோதிகளின் துணையுடன் மியான்மர் நாட்டுக்கு தப்பிச் சென்று இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேலும் பல போர் தந்திர நெறிமுறைகளை நவீன ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிம் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இருந்து நவீன உபகரணங்கள் டிரோன்கள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இவர்களின் உரையாடல்கள் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்துமே எலன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார் லிங் செயற்கைக்கோள் இணையம் வழியாக நடைபெற்றுள்ளது.
அமெரிக்க உளவாளியான இவனை உளவாளி என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் உளவாளி என்பவன் உளவு மட்டுமே பார்ப்பான். ஆனால் இவன் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து அந்த அரசுகளுக்கு எதிராகவே ஆயுதம் தூக்கிப் போராடக் கூடியவன். லிபியாவில் புரட்சி நடைபெற்ற போது தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து ஆயுதம் எடுத்து லிபியா அரசுக்கு எதிராகப் போராடியவன். சிரியா நாட்டுக்குச் சென்று சிரிய நாட்டு தீவிரவாதக் குழுவுடன் இணைந்து அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராடியவன்.
தற்போது இந்தியாவுக்கு வந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இப்போது கைது செய்யப்பட்டு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய உளவுத்துறை இவன் முன் வைக்கக்கூடிய கேள்விகள்:
எங்கெல்லாம் சென்றார்கள்
யாருடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள்
என்ன திட்டத்துடன் வந்தார்கள்
இவர்களுக்கு உதவி செய்த உள்ளூர் சமூக விரோதிகள் யார்
இவர்களை அனுப்பி வைத்தது யார்
விஷயம் கொதிநிலையில் சென்று கொண்டிருக்கும்போது இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் நாட்டு குடிமகன்களைப் பார்ப்பதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என புகார் கூறியிருக்கிறது.
உங்கள் நாட்டு குடிமகன்களாக இருக்கலாம், தற்போது அவர்கள் இந்தியாவில் தீவிரவாதிகளாகச் செயல்பட்டுள்ளார்கள். இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு எப்படி உடனடியாக அனுமதி கொடுக்க முடியும்?
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் அவசரமாக இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசி இருக்கிறார். நிச்சயமாக இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிகில் குப்தா பற்றி பேசி இருக்கக்கூடும். இறுதியாக அமெரிக்கா என்ன முடிவு எடுக்கிறதோ அதன் அடிப்படையில் இந்தியாவுடைய முடிவும் இருக்கும் என பேசி இருக்கக்கூடும். நாங்கள் தேடப்படும் ஒரு தீவிரவாதிக்கு எதிராக மட்டுமே செயல்பட்டோம். ஆனால் அமெரிக்க அரசு இந்திய அரசுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பேசி இருக்கலாம்.
RAW மீது தடை விதிக்க வேண்டும் என ஒரு தற்குறி ஆணையத்தை வைத்து அறிக்கை விட்டீர்கள். இப்பொழுது நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக CIA அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி தீர்மானம் கொண்டு வரட்டுமா? என இந்தியர்கள் கேட்கிறார்கள்.
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஏன் இந்தியாவிலுள்ள கேடுகெட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. ஆனால் அவர்கள் இந்தியத் திருநாட்டுக்கு எதிராக அந்நிய சக்திகளுடன் இணைந்து எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிய வருகின்றது.
ஆயுதம் தூக்குபவன் மட்டும் தீவிரவாதி அல்ல அதற்கு துணை போகும் நபர்களும் தீவிரவாதிதான். அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . மேலும் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடம் எத்தகைய தாக்குதைலை நடத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தீர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். அன்று பஞ்சாயத்திற்காக இந்திய அதிகாரிகளை அமெரிக்கா அழைத்தார்கள். ஆனால் இன்று தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது .
இந்தியாவில் நடக்கக்கூடிய ஒரு சம்பவத்தை உலகமே ஆதரிக்கிறது என்றால் கண்டிப்பாக அதில் அந்நிய நாட்டின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் திருந்த வேண்டும். மிக நுட்பமான முறையில் சதி திட்டங்களில் ஈடுபட்ட இவர்களை கைது செய்து பல சதிகாரர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இந்திய திருநாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
அனேகமாக துரந்தர் 3.0 படம் எடுக்கும் அளவிற்கு இந்த சம்பவம் இருக்கின்றது. கண்டிப்பாக இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட வேண்டும். இந்திய தேசத்திற்கு எப்படி எல்லாம் ஆபத்து வருகிறது என அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நொடியும் இந்திய தேசத்தைப் பாதுகாக்க காடுகளில் குகைகளில் பாதாள சுரங்கங்களில் அரசனாக ஆண்டியாக பிச்சைக்காரனாக பைத்தியக்காரனாக தங்கள் நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றி இந்த மண்ணைத் தங்கள் கண்களாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெய்ஹிந்த்
-சமூகதளப் பகிர்வு –




