
நேபாள எல்லையில் சிதமர்கி என்ற இடத்தில் நேபாளப் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பிகார் மாநிலம் லால்பண்டி – ஜான்கி நகர் எல்லையில் சோனேபர்ஷா காவல் எல்லைக்குட்பட்ட மொஹோபா கிராமத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

உள்ளூர்வாசிகள் மீது நேபாள பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பாட்னாவின் ஷா சாஸ்த்ரா அமைப்பின் ஐ.ஜி. சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
நேபாளப் படையினர் எல்லை தாண்டி வந்து எல்லையில் உள்ள இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.