
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு பெண்ணின் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளது.
அப்போது கணவனை பிணைக்கைதியாக பிடித்து வைத்துவிட்டு, 40 வயது மனைவி மற்றும் அவர்களுடைய 12 வயது மகளை மிரட்டி ஆளரவமற்ற பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் அவர்களின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்,