31 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனை கடந்த 2 வருடங்களாக பாலியல் தொல்லை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரின் கணவர் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தனியாக வசித்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பக்கத்துக்கு வீட்டு சிறுவன் ஒருவன் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த மாமரத்தில் கல் எரிந்தபோது கல் வீட்டின் ஜன்னலில் பட்டு கண்னாடி உடைந்துள்ளது.
இதனை வைத்து அந்த சிறுவனை மிரட்டிய அந்த பெண் கண்ணாடி உடைந்ததற்கு ஈடாக வீட்டில் இருந்து 2 ஆயிரம் பணம் எடுத்துவரும்படி மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அந்த சிறுவனும் வீட்டிற்கு தெரியாமல் 2 ஆயிரம் பணம் எடுத்துவந்த அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளான். இப்படியே பலமுறை அந்த சிறுவனை மிரட்டி பணம் பறித்துமட்டும் இல்லாமல், அவ்வப்போது தனது தேவைக்காக பாலியல் தொல்லையும் செய்துவந்துள்ளார்.
இவை அனைத்தும் அந்த பெண்ணிற்கு 29 வயதும், அந்த சிறுவனுக்கு 11 வயதும் ஆன நிலையில் இருந்து தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது பணம் காணாமல் போவதை அறிந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து சிறுவனை மிரட்டி விசாரித்தபோது சிறுவன் நடந்த விஷயங்களை அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளான்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.