மும்பையில் பல சினிமா புள்ளிகள் சேர்ந்து ஆபாச படங்களை எடுத்து அவற்றை லண்டனுக்கு அனுப்பி பல கோடிகள் சம்பாதித்துள்ளதை போலீசார் கண்டறிந்தார்கள்.
சமீபத்தில் பாலிவுட் நடிகையும் -மாடலுமான கெஹானா வசிஷ்ட் உள்ளிட்ட 8 பேரை மும்பை குற்றப்பிரிவு ஆபாச படமெடுத்த வழக்கில் கைது செய்துள்ளது.
அவர்கள் லண்டனில் உள்ள கெர்னின் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஆபாச வீடியோக்களை தயாரித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்தும் இணையத்தில் ஒளிபரப்பியுள்ளார்கள்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக இப்போது உமேஷ் காமத் என்ற பாலிவுட் திரைப்பட முக்கிய புள்ளியும் போலீஸிடம் சிக்கியுள்ளார் .
அடுத்து இந்த ஆபாச பட விவகாரத்தில் லண்டன் நிறுவனத்தை சார்ந்த பக்ஷியின் பங்கு பற்றியும் ஆராயப்படுகிறது. உமேஷ் காமத் அந்த நிறுவனத்தில் இயக்குனராக இருந்துள்ளதை போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்தனர் .
இப்போது அவரின் மூலம்இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. லண்டன் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் இந்திய ஆபாச படங்களுக்கு அதிக விலை கொடுக்க தயாராக இருப்பதாவும், அதனால் இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் போலீசார் அவர்களின் இடத்தில் ரெய்டு நடத்திய போது பல பெண்கள் மீட்கப்பட்டார்கள்.
மேலும் இது வரை இந்த உமேஷ் காமத்தின் தலைமையில் செயல்பட்ட இந்த கூட்டம் எட்டுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து அதை வைத்து பல கோடிகள் சம்பாதித்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளார்கள். இது அவர்களின் பேங்க் கணக்கை பரிசோதித்த போது தெரிய வந்துள்ளது.
மேலும் போலீசார் அவர்கள் வேறு எந்த வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்து பணம் பரிவர்த்தனை செய்தார்கள் போன்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். மேலும் பல சினிமா புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.