
கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளித்த நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு சரமாரி அடி விழுந்தது. போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் கடந்த 6ம் தேதி செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
அப்போது அதே வார்டில் இருந்த ஒரு நோயாளியின் உதவியாளரான விஜயகுமார் என்பவர், செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைபார்த்த மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், விஜயகுமாரை பிடித்து சரமாரி அடித்து உதைத்தனர்