இந்திய விமானப்படையில் நாடு முழுவதும் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் Commissioned Officer பதவிகளுக்கு என 317 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது BE அல்லது B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும். விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் இணையதளம் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை இணைத்துக் கொள்ளுங்கள் For more info: IAF-Commissioned-Officer-Notification.pdf – Google Drive