கர்நாடக மாநிலத்தில் பயன்படுத்திய ஆணுறைகளைக் கோவில்களில் வீசி இழிவுபடுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் பயன்படுத்திய ஆணுறைகளைக் இந்து கோவில்களில் வீசி இழிவுபடுத்தியதற்காக 62 வயது கிறிஸ்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேவதாஸ் தேசாய் என்பவர், மங்களூருவில் உள்ள கோயில் வளாகங்களிலும், கோயில்களில் உள்ள காணிக்கை பெட்டிகளிலும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசியதற்காக மங்களூரு தெற்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஒரு வருடமாக இதுபோன்ற தொடர் அவமதிப்புகளுக்குப் பின்னால் உள்ள குற்றவாளியை தேடிக் கொண்டிருந்த காவல்துறை, இறுதியாக நேற்று முன்தினம் கைது செய்தது.
கோவில் வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மங்களூருவில் உள்ள ஐந்து கோவில்கள் நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்தன.
ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். ஆனால் டிசம்பர் 27 அன்று கொரஜ்ஜன கட்டே கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் நன்கொடை பெட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த நபர் இறுதியாக பிடிபட்டார். இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோயில் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர் காணிக்கை பெட்டியில் எதையோ போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த நபரை போலீசார் கைது செய்தனர், மேலும் விசாரணையின் போது அவர் இதேபோல் பல கோவில்களில் ஆணுறைகளை வீசி அவமதித்ததாக ஒப்புக்கொண்டார்.