eid mubarak - 2026

இஸ்லாமியரின் பண்டிகையான ஈத் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரம்ஜான் வாழ்த்தில், இந்த நாளில் சமூகத்தில் ஒற்றுமையின் இணைப்பு, வலிமையாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அதுபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும், சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை குடும்பங்களுக்கு இந்தப் பண்டிகை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

ஈகைத் திருநாள் என அழைக்கப்படும் ஈத் பண்டிகை, இன்று கொண்டாடப் படுகிறது. பிறை தெரிந்ததாக தலைமை காஜி அறிவித்ததை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending