கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில் கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கனமழை காரணமாக கபினி அணை நிரம்பிவிட்டதால் உபரி தண்ணீரை மட்டுமே கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டது என்பது உலகிறே தெரிந்த நிலையில் தன்னுடைய சந்திப்பால் தான் தண்ணீர் வந்ததாக கமல் கூறியுள்ள காமெடியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் குமாரசாமிக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்த டுவீட்டுக்கு பதில் கூறியுள்ள தமிழிசை செளந்திரராஜன், ‘ ‘கர்நாடகத்தை ஆள்பவர் தண்ணீர் கொடுக்கவில்லை. ஆண்டவன் (ரங்கநாதர்) கொண்டு வந்த மழையால்தான் தண்ணீர் வந்திருக்கிறது. கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல! நம்ம ஊர் சாமிக்குத்தான்….என்று கூறியுள்ளார்.




She is right! Had the river not over-flowed due to heavy rain,KS wouldn’t have ordered the opening of the shutters! Kamaal Hassan has cut a sorry figure!