
பிரபல நடிகை அஞ்சலி தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2, விஜய்சேதுபதி படம், லிசா, கீதாஞ்சலி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பிக்காட் இயக்கும் புதிய த்ரில் படம் ஒன்றில் அஞ்சலி நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இந்த படத்தின் டைட்டில் அஞ்சலியின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஒ’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கவுள்ளார். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அதன் பின்னர் பசங்க 2′, ‘சவரக்கத்தி’, ‘துப்பறிவாளன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.



